உணவு என நினைத்து எலி மருந்தை சாப்பிட்ட 3 வயது குழந்தைக்கு நடந்த துயரம்!

உணவு என நினைத்து எலி மருந்தை சாப்பிட்ட 3 வயது குழந்தைக்கு நடந்த துயரம்!

திருநெல்வேலி அருகே தின்பண்டம் என நினைத்து தவறுதலாக எலி மருந்தை சாப்பிட்ட மூன்று வயது பெண் குழந்தை பரிதாபமாக உயிர் இழந்தது. இச்சம்பவம் அப்பகுதியில் கடும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திருநெல்வேலி மாவட்டம், மானூர் அருகில் உள்ள இரண்டும் சொல்லான் தேவாலயத் தெருவைச் சேர்ந்தவர் வேதநாயகம் அலெக்ஸ் மணி. விவசாயியாக உள்ளார். இவரது மனைவி சுகிர்தா. இந்தத் தம்பதியின் மூன்று வயது குழந்தை ஷாம் லிரின். இவர்கள் வீட்டில் எலித்தொல்லை அதிகமாக இருந்தது. இதற்காக எலியைக் கொல்லும் எலி மருந்து வாங்கி வீட்டில் வைத்துள்ளனர். இந்நிலையில் மூன்று வயது மகள் ஷாம் லிரின் அதைத் தின்பண்டம் என நினைத்து தவறுதலாக எடுத்துச் சாப்பிட்டார். இதை பெற்றோரும் பார்க்கவில்லை.

திடீரென குழந்தை வாந்தி எடுக்கத் தொடங்கியது. இதனால் அழகிய பாண்டியபுரம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் காட்டி, மருந்து பெற்றனர். இந்நிலையில் இன்று காலையில் குழந்தை ஷாம் லிரின் திடீரென மயங்கி விழுந்தான். உடனே குழந்தையை பெற்றோர் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் வழியிலேயே குழந்தை ஷாம் லிரின் பரிதாபமாக உயிர் இழந்தார். இந்தச் சம்பவம் குறித்து மானூர் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in