விளையாடிக் கொண்டிருந்த போது விபரீதம்: தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து 3 வயது சிறுவன் மரணம்

விளையாடிக் கொண்டிருந்த போது விபரீதம்: தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து 3 வயது சிறுவன் மரணம்

வீட்டு முன்புறம் விளையாடிக் கொண்டு இருந்தபோது தண்ணீர் தொட்டிக்குள் தவறிவிழுந்து மூன்று வயது சிறுவன் உயிர் இழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி ஜோதிநகர் நான்காவது தெருவைச் சேர்ந்தவர் உத்தரடராமன். இவரது மனைவி உத்ரா. இந்தத் தம்பதியினருக்கு அகிலன்(3), உத்தண்டு என இரு குழந்தைகள். இவர்கள் இருவரும் இன்று காலையில் தங்கள் வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அகிலன் வீட்டின் முன்னாள் இருந்த தரைமட்டத்தில் இருந்த தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்தார்.

இதைப் பார்த்ததும் அகிலனின் தாய், உத்ரா உடனே சென்று குழந்தையைத் தூக்கினார். ஆனால் அதற்குள் குழந்தையின் உடலுக்குள் ஏராளமான தண்ணீர் மூக்கு மற்றும் வாய் வழியாகப் போயிருந்தது. உடனே உத்ரா தன் குழந்தையை கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை அகிலன் ஏற்கெனவே உயிர் இழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து கோவில்பட்டி கிழக்கு காவல்நிலைய போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in