17 வயது சிறுவன் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை: வேறு ஒருவரை காதலி திருமணம் செய்ததால்  விபரீத முடிவு

17 வயது சிறுவன் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை: வேறு ஒருவரை காதலி திருமணம் செய்ததால் விபரீத முடிவு

ராஜஸ்தானில் காதலித்த இளம்பெண் வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டதால் மனமுடைந்த 17 வயது சிறுவன் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் பில்வாராவைச் சேர்ந்த 17 வயது சிறுவன் நேற்று முன்தினம் சாலையில் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுக் கொண்டார். இதனால் படுகாயமடைந்து மயங்கி விழுந்தார். அப்போது அவ்வழியாக சென்றவர்கள், சிறுவனை மீட்டு மகாத்மா காந்தி மருத்துவமனையில் சேர்த்தனர். இதன் பின் உதய்பூர் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்கு சிறுவன் அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் நேற்று நள்ளிரவு சிறுவன் மரணமடைந்தார்.

இச்சம்பவம் குறித்து போலீஸார் கூறுகையில், " தன்னைத்தானே சுட்டுக் கொன்று தற்கொலை செய்து கொண்டவர் யாஷ் வியாஸ் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது. அவருடன் பள்ளியில் படித்த மாணவியைக் காதலித்து வந்துள்ளார். அந்த பெண்ணுக்கு சமீபத்தில் திருமணம் நடைபெற்றுள்ளது. இதனால், மனமுடைந்த சிறுவன் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துள்ளார். சாவதற்கு முன்பு, தனது காதலியின் திருமணத்தால் வருத்தப்படுவதாக சமூகவலைதளத்தில் பதிவு செய்துள்ளார். அவரது உடல் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. எந்த பிரச்சினை என்றாலும் தற்கொலை என்பது தீர்வாகாது" என்று தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in