6 வயது சிறுமி வாயில் துணியை அடைத்து சிறுவன் செய்த செயல்: ம.பியில் அதிர்ச்சி சம்பவம்

6 வயது சிறுமியை கொலை செய்த சிறுவன் கைது
6 வயது சிறுமியை கொலை செய்த சிறுவன் கைது6 வயது சிறுமி வாயில் துணியை அடைத்து சிறுவன் செய்த செயல்: ம.பியில் அதிர்ச்சி சம்பவம்

செல்போனில் ஆபாச படம் பார்த்து பழக்கப்பட்ட 15 வயது சிறுவன், 6 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த சம்பவம் மத்தியப் பிரதேசத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியப் பிரதேச மாநிலம் கரேரோ எல்லைக்குட்பட்ட படோரா கிராமத்தைச் சேர்ந்த 6 வயது சிறுமி காணாமல் போனதாக நேற்று முன்தினம் அவரது தாய் புகார் செய்தார். கோயிலுக்கு தன்னுடன் வந்த மகள் காணாமல் போனதாக அவர் போலீஸில் புகாரில் கூறியிருந்தார்.

இதையடுத்து கரேரோ போலீஸார் வழக்குப்பதிவு செய்து சிறுமியைத் தேடினர். அப்போது அந்த ஊரில் உள்ள பள்ளியில் சிறுமி வாயில் துணி அடைக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். உடனடியாக அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அப்போது கொலை செய்யப்பட்ட சிறுமி கடைசியாக அப்பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுவனுடன் காணப்பட்டார் என்ற தகவல் போலீஸாருக்குக் கிடைத்தது. இதையடுத்து அந்த சிறுவனைப் பிடித்து போலீஸார் விசாரணை நடத்திய போது அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியானது.

அந்த சிறுமியை அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததை சிறுவன் ஒப்புக்கொண்டார். இந்த விஷயத்தை வெளியே சொல்லி விடுவார் என்று அச்சமடைந்து சிறுமியைக் கொலை செய்ததாக சிறுவன் கூறினார். இச்சம்பவம் குறித்து கரேரா காவல் நிலையப் பொறுப்பாளர் சதீஷ் சிங் சௌஹான் கூறுகையில், "அடிக்கடி தனது செல்போனில் ஆபாசப் படங்களைப் பார்ப்பதாக சிறுவன் ஒப்புக்கொண்டான். இந்த பழக்கத்திற்கு அடிமையான சிறுவன் கோயிலுக்குச் சென்று விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த சிறுமியை அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்துள்ளார். அவருடன் வேறு யாரும் இச்சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனரா என்று விசாரித்து வருகிறோம்" என்றார்.

போக்சோ சட்டத்தின் கீழ் நேற்று கைது செய்யப்பட்டுள்ள சிறுவனிடம் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரபப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in