மூளைக்கு வேகமாக பரவிய வைரஸ்; ரேபிஸ் தடுப்பூசி போட்டும் பயனில்லை: தெரு நாயால் பறிபோன சிறுமியின் உயிர்

மூளைக்கு வேகமாக பரவிய வைரஸ்; ரேபிஸ் தடுப்பூசி போட்டும் பயனில்லை: தெரு நாயால் பறிபோன சிறுமியின் உயிர்

கேரளத்தில் நாய் கடித்து அண்மையில் கல்லூரி மாணவி ஒருவர் பலியான நிலையில் இப்போது அடுத்த சம்பவமாக 12 வயது சிறுமி, நாய் கடித்து பலியாகி இருக்கும் சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

முதல் சம்பவம்!

கேரளத்தின் பாலக்காடு மாவட்டம், மங்காரா பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீலெட்சுமி (18). இவர் கோயம்புத்தூரில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பி.சி.ஏ. முதலாமாண்டு படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த மே மாதம் 30-ம் தேதி கல்லூரிக்குச் செல்லும் வழியில் நாய் ஒன்று இவரைக் கடித்தது. உடனே ரேபிஸ் தடுப்பு மருந்தையும் எடுத்துக் கொண்டார் ஸ்ரீலெட்சுமி. அதன் பின்னர் எந்த அறிகுறியும் இல்லாததால் இயல்பாகவே இருந்தார். ஆனால் திடீர் உடல்நலக்குறைவால் உயிர் இழந்தர். இந்த சோகம் அடங்குவதற்குள் இப்போது அடுத்த சோகம் அரங்கேறியுள்ளது.

சம்பவம் 2:

கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் மயிலபுறம் பகுதியைச் சேர்ந்தவர் அபிராபி. 12 வயதான இவர் கடந்த வாரம் வீட்டில் இருந்து பால் வாங்கக் கடைக்கு வந்துள்ளார். அப்போது அவரைத் தெருநாய்கள் கடித்தது. இதில் கை, கால், கண், முகம் என பல இடங்களிலும் அபிராமிக்கு காயம்பட்டது. அபிராமி உடனடியாக பத்தனம் திட்டா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு வெறிநாய் கடிக்கான ரேபிஸ் தடுப்பூசியும் போடப்பட்டது. ஆனால் அபிராமிக்கு திடீரென உடல் நிலை மிகவும் மோசமாக அவசரமாக கோட்டயம் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி சிறுமி அபிராமி உயிர் இழந்தார்.

இது அரிதிலும், அரிதான நிகழ்வு. சில மருந்துகள் சில உடம்பிற்கு பலனளிக்காமல் போகலாம். அது சிறுமி அபிராமிக்கும் நிகழ்ந்திருக்கிறது. வைரஸ் அவர் மூளைக்கு வேகமாக பரவியதால் மரணம் நிகழ்ந்திருக்கக்கூடும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கல்லூரி மாணவி ஸ்ரீலெட்சுமியும் ரேபிஸ் தடுப்பூசி போட்டும் உயிர் இழந்திருந்தார். இதனால் கேரள மக்கள் தெருநாய்களைப் பார்த்தாலே மிகவும் அச்சத்துடன் கடந்து செல்கின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in