பெற்றோர் கடும் எதிர்ப்பு: 9-ம் வகுப்பு மாணவி காதலனுடன் தற்கொலை

பெற்றோர் கடும் எதிர்ப்பு: 9-ம் வகுப்பு மாணவி காதலனுடன் தற்கொலை

அறந்தாங்கி அருகே 9- ம் வகுப்பு படித்த மாணவி, காதலுடன் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கடை இடையாத்தூரைச் சேர்ந்தவர் பாலமுருகன். இவரது 15 வயது மகள் அரசு மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். இவரும் அதே பகுதியைச் சேர்ந்த லட்சுமணன் மகன் அருணும் 2 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இவர்களின் காதலுக்கு இருவீட்டிலும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் அருணின் சகோதரி திருமணம் நேற்று நடைபெற்றது. இந்த திருமணத்திற்கு மாணவி சென்று வந்ததை அவரது பெற்றோர் கண்டித்துள்ளனர். இந்த நிலையில் மாணவியைக் காணவில்லை. அவரது பெற்றோர் பல இடங்களிலும் அவரைத் தேடினர்.

இந்த நிலையில் நேற்று மாலை அப்போது ஒரு கோயில் அருகே உள்ள மரத்தில் மாணவியும், அருணும் தூக்கில் தொங்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து நாகுடி போலீஸாருக்குத் தகவல் அளித்தனர். இதன் பேரில் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று இருவரது சடலங்களை மீட்டு அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in