'ஹலோ, நான் பேங்க் மேனேஜர் பேசுறேன்': நக்மா வங்கிக்கணக்கில் இருந்து திருடப்பட்ட பணம்

நடிகை நக்மா
நடிகை நக்மா'ஹலோ, நான் பேங்க் மேனேஜர் பேசுறேன்': நக்மா வங்கிக்கணக்கில் இருந்து திருடப்பட்ட பணம்

வங்கி அதிகாரி போல ஒருவர் பேசிக்கொண்டிருக்கும் போதே நடிகை நக்மா வங்கிக் கணக்கில் இருந்து 99,998 ரூபாய் வேறு வங்கிக் கணக்கு மாற்றப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

1994-ம் ஆண்டில் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை நக்மா. முதலில் இந்தி, அடுத்து தெலுங்கு என நடித்துக் கொண்டிருந்தவரை 1994-ம் ஆண்டு தனது 'காதலன்' திரைப்படம் தமிழுக்குக் கொண்டு வந்தவர் இயக்குநர் ஷங்கர். இதன்பின் 'பாட்சா', 'ரகசியப் போலீஸ்', 'வில்லாதி வில்லன்', 'லவ் பேர்ட்ஸ்', 'மேட்டுக்குடி','ஜானகிராமன்', 'பெரிய தம்பி', 'பிஸ்தா', 'அரவிந்தன்', ' வேட்டிய மடிச்சு கட்டு', 'சிட்டிசன்', 'தீனா' உள்பட பல படங்களில் நடித்துள்ளார்.

தற்போது காங்கிரஸ் கட்சியில் உள்ள நக்மாவின் செல்போனுக்கு ஒரு மெசேஜ் வந்துள்ளது. மும்பையில் செயல்படும் தனியார் வங்கியின் பெயரில் அனுப்பப்பட்ட அந்த மெசேஜை நக்மா ஓபன் செய்துள்ளார். அப்போது வங்கி அலுவலர் போல் பேசிய நபர், வங்கியின் கேஒய்சி புதுப்பிக்க உதவுவதாகக் கூறியுள்ளார். அப்போது அவர் பேசிக் கொண்டிருந்த சிறிது நேரத்திலேயே நக்மாவின் வங்கிக் கணக்கிலிருந்து 99,998 ரூபாய் வேறு வங்கிக் கணக்கு மாற்றப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த நக்மா. மும்பை சைபர் கிரைம் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார்.

இதுகுறித்து நக்மா கூறுகையில்," அந்த மெசேஜில் கொடுக்கப்பட்டுள்ள லிங்கில் கேட்கப்பட்ட எந்த விவரங்களையும் நான் பகிரவில்லை. ஆனாலும், செல்போனில் பேசிய நபர் கேஒய்சி புதுப்பித்துத் தருவதாகக் கூறி இன்டர்நெட் பேங்கிங் மூலம் வேறொரு வங்கிக் கணக்குக்குப் பணத்தை மாற்றி உள்ளார்" என்று கூறியுள்ளார்.

சமீபத்தில் மும்பையில் சுமார் 80 பேரிடம் இதுபோன்ற ஆன்லைன் மூலமாக பணத்தை இழந்துள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். எனவே, வங்கி என்ற பெயரில் வரும் லிங்கை ஓபன் செய்ய வேண்டாம் என்று பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in