அதிர்ச்சி... 9 ஆண்டுகளாக சிறுமி பலாத்காரம்... தாய்மாமனுக்கு 97 ஆண்டு சிறை! நீதிமன்றம் அதிரடி!

காசர்கோடு விரைவு நீதிமன்றம்
காசர்கோடு விரைவு நீதிமன்றம்

9 ஆண்டுகளாக சிறுமியைப் பாலியல் துன்புறுத்தல் செய்த உறவினரான தொழிலதிபருக்கு 97 ஆண்டு சிறைத்தண்டனை வழங்கி காசர்கோடு கூடுதல் அமர்வு நீதிமன்றம் பரபரப்பான தீர்ப்பளித்துள்ளது.

கேரளா மாநிலம், காசர்கோடு மஞ்சேஸ்வரத்தைச் சேர்ந்த 37 வயது தொழிலதிபர். இவர் சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளில் தொழில் செய்து வந்தார். இவரது வீட்டில் ஏழை மற்றும் ஆதரவற்ற அவரது உறவினரது மகள் வளர்ந்து வந்தாள்.

வெளிநாட்டில் இருந்து வரும் போதெல்லாம் தாய்மாமனான தொழிலதிபர் சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார். இதன்படி அந்த சிறுமியை 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை அவர் பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார்.

அதாவது கடந்த 2008-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை சிறுமியை அவர் பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்துள்ளார். கடந்த 2019-ம் ஆண்டு பத்தாம் வகுப்பு தேர்வடைந்த பிறகு மிகவும் சோர்வடைந்த அந்த சிறுமி, காகர்கோடு மாவட்ட சட்டசேவைகள் மையத்தை அணுகி தனக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து துணை நீதிபதியிடம் புகார் அளித்தார்.

இதையடுத்து, மஞ்சேஸ்வரத்தில் உள்ள மகிளா மந்திரம் மறுவாழ்வு மையத்தில் சிறுமி தங்குவதற்கு சட்டப் பணிகள் ஆணையம் ஏற்பாடு செய்து, குற்றவாளி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு விசாரணையின் போது, தொழிலதிபர் தரப்பு கொடுத்த அழுத்தத்தால் சிறுமி பிறழ்வு சாட்சியளித்தாக கூறப்படுகிறது. எனினும், மாஜிஸ்திரேட் முன் அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் காசர்கோடு கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் தொழிலதிபருக்கு 97 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. இந்த அதிரடி தீர்ப்பு கேரள மாநிலத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in