மேல் வீட்டில் இருந்த ஆட்கள்; கீழ் வீட்டில் 95 பவுன் நகை, 45 கிலோ வெள்ளியை கொள்ளையடித்துச் சென்ற கும்பல்!

மாதிரிப் படம்
மாதிரிப் படம்

மதுரையில் தனியார் நிறுவன ஊழியர் ஊழியர் வீட்டில் வீடு புகுந்து 95 பவுன் நகைகள், வெள்ளிப் பொருள்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை மேலூர் குமார் நகரைச் சேர்ந்தவர் பிரபு சங்கர்(45). இவர் பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் அதிகாரியாக உள்ளார். இதனால் பிரபு சங்கர் அங்கு குடும்பத்துடன் வசித்து வருகிறார். மதுரையில் இருக்கும் தன் வீட்டின் மாடிப் பகுதியை மட்டும் வாடகைக்கு விட்டுள்ளார். இந்நிலையில் பிரபு சங்கரின் மாமனார் பாலகிருஷ்ணன் என்பவர் தன் மருமகனின் வீட்டைப் பார்க்கச் சென்றார். அப்போது வீட்டின் கதவைத் திறந்து உள்ளே சென்று பார்த்தபோது பொருள்கள் அனைத்தும் சிதறிக் கிடந்தன.

இதுகுறித்து மேலூர் போலீஸாருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. மர்மநபர்கள் வீட்டின் பின்பக்க ஜன்னலை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். இந்த கும்பல் வீட்டு பீரோவை உடைத்து அதில் இருந்த 95 பவுன் நகைகள், 45 கிலோ வெள்ளிப் பொருள்கள், ரொக்கப் பணம் 1 லட்சத்து 10 ஆயிரம் ஆகியவற்றையும் கொள்ளையடித்துச் சென்றது.

வீட்டின் மேல்தளத்தில் ஆள் இருக்கும்போதே வீடு புகுந்து கொள்ளையடித்த இந்த கும்பல் குறித்து மேலூர் துணை காவல் கண்காணிப்பாளர் ஆர்லியஸ் ரெபோனி தலைமையிலான போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in