40 யூனிட் மின்சாரத்திற்கு 94 ஆயிரம் ரூபாய் கட்டணம்: வாட்ஸ் அப் செய்தியால் தொழிலாளி அதிர்ச்சி

40 யூனிட் மின்சாரத்திற்கு  94 ஆயிரம் ரூபாய் கட்டணம்: வாட்ஸ் அப் செய்தியால் தொழிலாளி அதிர்ச்சி

40 யூனிட் மின்சாரத்திற்கு 94,985 ரூபாய் மின் கட்டணம் செலுத்த வேண்டும் என்று வந்த வாட்ஸ்அப் செய்தியால் கூலித்தொழிலாளி அதிர்ச்சியடைந்தார்.

ஈரோடு மாவட்டம், மல்குத்திபுரம் தொட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ரேவண்ணா ( 40). கூலித்தொழிலாளியான இவர், வீட்டிற்கு 40 யூனிட் முதல் 50 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்தி வந்துள்ளார். அரசின் திட்டப்படி வீட்டிற்கு 100 யூனிட் மின்சாரம் இலவசம் என்பதால், ரேவண்ணா தனது வீட்டிற்கு மினக்கட்டணமே செலுத்தவில்லை. ‘

இந்நிலையில், சம்பவத்தன்று அவரின் செல்போனுக்கு ரூ.94,985 மின்கட்டணம் செலுத்த வேண்டும் என குறுஞ்செய்தி வந்துள்ளது. இதைப் பார்த்து ரேவண்ணா அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து தாளவாடி மின்வாரிய அலுவலகத்திற்கு சென்று அதிகாரிகளிடம் ரேவண்ணா முறையிட்டார். அவரின் புகாரை ஏற்ற அதிகாரிகள், மின்கட்டண குளறுபடியை சரி செய்து தருவதாக உறுதி அளித்தனர். இதனால் ரேவண்ணா நிம்மதியடைந்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in