தமிழகத்தில் நீர் தேக்கங்கள் 90.22% நிரம்பின: நீர்வளத்துறை தகவல்

தமிழகத்தில் நீர் தேக்கங்கள் 90.22% நிரம்பின: நீர்வளத்துறை தகவல்

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் உள்ள 90 நீர்த்தேக்கங்கள் 90.22 % அளவுக்கு நிரம்பிவிட்டன என தமிழக நீர்வளத்துறை சார்பில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை தொடக்கம் முதலே நல்ல மழைப்பொழிவைக்  கொடுத்து வருகிறது. அதனால் தமிழகத்தில் உள்ள ஏரி, குளங்கள் அனைத்தும் வேகமாக நிரம்பி வருகின்றன.  அதேபோல தமிழகத்தில் உள்ள பெரும்பாலான அணைகளும் நிரம்பி வழிகின்றன. இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள 90 நீர்த்தேக்கங்கள் 90.22% அளவிற்கு நிரம்பி விட்டன என்று தமிழக நீர்வளத்துறை தெரிவித்துள்ளது.

மேட்டூர் உள்ளிட்ட 11 நீர்த்தேக்கங்கள் அதன்  முழு கொள்ளளவை எட்டியுள்ளன. மற்றும் 90 நீர்த்தேக்கங்கள் 90.22 சதவீதம் அளவிற்கு நிரம்பியுள்ளன. குறிப்பாக செம்பரம்பாக்கம் ஏரி 88.20% நிரம்பி உள்ளது.   பூண்டி நீர்த்தேக்கம்  88.33, சதவீதமும்,  சோழவரம் நீர் தேக்கம் 75.86 சதவீதம் அளவுக்கும் நிரம்பியுள்ளன என்று நீர்வளத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in