'90ஸ் கிட்ஸ்'க்கு பெண் கிடைக்கவில்லை: போஸ்டர் ஒட்டி மணமகள் தேடும் தனியார் நிறுவன மேலாளர்!

'90ஸ் கிட்ஸ்'க்கு பெண் கிடைக்கவில்லை: போஸ்டர் ஒட்டி மணமகள் தேடும் தனியார் நிறுவன மேலாளர்!

மதுரையைச் சேர்ந்த தனியார் நிறுவன மேலாளர் ஒருவர் மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் நூதனமான முறையில் போஸ்டர் ஒட்டி மணமகளைத் தேடி வருகிறார்.

மதுரை வில்லாபுரம் அருகே மீனாட்சி நகரைச் சேர்ந்தவர் ஜெகன் (27). பிஎஸ்சி ஐடி படித்த இவர் தற்போது தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிகிறார். கடந்த 4 வருடங்களாக பல வரன்கள் பார்த்தும் மணப்பெண் கிடைக்காததால் தற்போது மணமகள் தேவை என மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் மணமகள் தேவை போஸ்டரை ஒட்டி பெண் தேடி வருகிறார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், "நான் தனியார் நிறுவனத்தில் மேலாளராகவும், பகுதி நேர வேலையாக பிரியாணி கடையிலும், மாமதுரை பப்ளிசிட்டி என்ற நிறுவனத்தில் போஸ்டர் ஒட்டும் பணியையும் செய்கிறேன். பல பேருக்கு போஸ்டர் அடித்து ஒட்டும் நான், எனக்காக ஒரு போஸ்டர் ஒட்ட முடிவு செய்து இதை செய்துள்ளேன். நான்கு வருடமாக பெண் பார்த்தும் இதுவரை வரன் அமையவில்லை. இது புரோக்கர்களுக்கு வந்த சோதனையான அல்லது 90-ஸ் கிட்ஸ்களுக்கு வந்த சோதனையா எனத் தெரியவில்லை, போஸ்டரைப் பார்த்து பெண்கள் தொடர்பு கொள்வார்கள் என்று பார்த்தால், பெண் புரோக்கர்களே தொடர்பு கொள்கிறார்கள்" என்றார். மணமகள் தேவை விளம்பரத்தை நூதன முறையில் செய்துள்ள ஜெகன் ஒட்டிய போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in