சாலையோரம் நின்ற கன்டெய்னர்: திறந்து பார்த்த போது அதிர்ந்த அதிகாரிகள்

 ரேஷன் அரிசி மூட்டை
ரேஷன் அரிசி மூட்டை

சாலையோரம் நின்ற கன்டெய்னரை திறந்து பார்த்த அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். கேட்பாரற்று சாலையோரம் நின்ற கன்டெய்னர் லாரியில் 9 டன் ரேசன் அரிசி இருந்தது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து கேரளத்திற்கு ரேசன் அரிசி தொடர்ந்து கடத்தப்பட்டு வருகிறது. இதைக் கட்டுப்படுத்தும்வகையில் காவல் துறையினரும், வருவாய்த்துறையினரும் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். குமரி மாவட்டத்தில் இருந்து கேரளம் செல்லும் அனைத்து சோதனைச் சாவடிகளிலும் கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் உணவுக்கடத்தல் தடுப்புப் பிரிவு ஆய்வாளர் விஜி தலைமையிலான அதிகாரிகள் தக்கலை அருகில் உள்ள புலியூர் குறிச்சி பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சாலையோரத்தில் கன்டெய்னர் லாரி ஒன்று நின்று கொண்டிருந்தது. அதில் ஓட்டுநர் உள்ளிட்ட யாரும் இல்லை. அதிகாரிகள் வெகுநேரமாக கன்டெய்னர் லாரி நிற்பதைப் பார்த்து சந்தேகப்பட்டு அதைத் திறந்து பார்த்தனர். அப்போது அதில் 190 மூடைகளில், சுமார் 9 டன் ரேசன் அரிசி இருந்தது. கன்டெய்னர் லாரியில் ஓட்டுநரும் இல்லை. இதனைத் தொடர்ந்து அதிகாரிகள் 9 டன் ரேசன் அரிசியையும் காப்புக்காடு பகுதியில் உள்ள அரசு நுகர்பொருள் வாணிபக் கிட்டங்கியில் ஒப்படைத்தனர். கன்டெய்னர் லாரியின் பதிவெண்ணின் அடிப்படையில் அதன் உரிமையாளரைக் கண்டுபிடிக்கும் முயற்சியிலும் ஈடுபட்டு உள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in