இலங்கை கடற்படை அட்டூழியம்... 9 தமிழக மீனவர்கள் கைது!

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்கள்
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்கள்

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற 9 மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறைபிடித்து சென்றுள்ள சம்பவம் மீனவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மண்டபம் பகுதியைச் சேர்ந்த வேலு, நாகநாதன் என்ற மீனவர்களுக்கு சொந்தமான இரண்டு விசைப்படகுகளில் மீனவர்கள்  ஒன்பது பேர் நேற்று இரவு மீன் பிடிக்க கடலுக்குள் சென்றனர். நடுக்கடலில் இந்திய எல்லைப் பகுதியில் அவர்கள் மீன் பிடித்துக் கொண்டு இருந்த போது அங்கு வந்த இலங்கை ராணுவத்தினர் அவர்கள் எல்லை தாண்டி வந்து மீன் பிடிப்பதாக கூறி படகுகளில் இருந்த மீனவர்களைக் கைது செய்து அவர்களின் இரண்டு படகுகளோடு காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்துச் சென்றனர்.

இவர்கள் அனைவரும் விசாரணைக்காக காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். ராணுவத்தினரின் விசாரணைக்கு பிறகு போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டு,  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள் என தெரிகிறது. 

தொடர்ந்து இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை சிறை பிடித்து செல்லும் சம்பவத்தால் தமிழக மீனவர்கள் அதிர்ச்சியிலும், சோகத்திலும் ஆழ்ந்துள்ளனர். 

கடந்த சில ஆண்டுகளாக தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் உயிரிழப்பது நிகழவில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ள நிலையில், நூற்றுக்கணக்கான மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டு இலங்கை சிறையில் வாடுவதும், அவர்களின் விலைமதிப்பு மிக்க படகுகள் இலங்கை துறைமுகங்களில் வீணாகி கிடப்பதும் மீனவர்களை மிகவும் கவலை அடைய செய்துள்ளது. தமிழக மீனவர்களின் பிரச்சனைகளுக்கு அரசு, நிரந்தர தீர்வு காண வேண்டும் என்பதே மீனவர்களின் நெடுநாளைய கோரிக்கையாக இருந்து வருகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in