6ம் கட்ட தேர்தலில் 889 வேட்பாளர்கள் போட்டி... தேர்தல் ஆணையம் தகவல்!

தேர்தல் ஆணையம்
தேர்தல் ஆணையம்
Updated on
2 min read

இந்தியாவில் 6ம் கட்ட மக்களவைத் தேர்தலில் 889 வேட்பாளர்கள் போட்டியிட உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

18வது மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்பட்டு வருகின்றன. கடந்த 13ம் தேதியுடன் 4 கட்ட தேர்தல்கள் முடிவடைந்துள்ளன. வரும் திங்கள்கிழமை (மே 20) 5ம் கட்டத் தேர்தல் நடைபெற உள்ளது. அதைத் தொடர்ந்து வரும் மே 25ம் தேதி, ஜூன் 1ம் தேதிகளில் முறையே கடைசி இரு கட்ட தேர்தல்கள் நடைபெற உள்ளன.

இந்நிலையில் 6ம் கட்டத்தில் தேர்தல் நடைபெறும் 7 மாநிலங்கள், யூனியன் பிரதேசத்தில் 57 மக்களவைத் தொகுதிகளில் 1978 வேட்புமனுக்கள் பெறப்பட்டன.

மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு
மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு

இதில் அதிகபட்சமாக உத்தரப்பிரதேசத்தில் இருந்து 14 தொகுதிகளில் 470 வேட்பு மனுக்களும், ஹரியானாவில் 10 தொகுதிகளில் 370 வேட்பு மனுக்களும் வரப்பெற்றதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

ஜார்க்கண்டில் உள்ள ராஞ்சி மக்களவைத் தொகுதியில் அதிகபட்சமாக 70 வேட்பு மனுக்களும், டெல்லியின் வடகிழக்கு டெல்லி மக்களவைத் தொகுதியில் 69 வேட்புமனுக்களும் பெறப்பட்டதாகவும், வேட்புமனு பரிசீலனைக்குப் பிறகு 57 தொகுதிகளில் மொத்தம் 889 வேட்பாளர்கள் களத்தில் உள்ளதாகவும் இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்திய தேர்தல் ஆணையம்
இந்திய தேர்தல் ஆணையம்

ஜம்மு - காஷ்மீரின் அனந்த் நாக் - ரஜவுரி மக்களவைத் தொகுதியின் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அந்த தொகுதியில் மட்டும் வரும் 26ம் தேதி தேர்தல் நடத்தப்பட உள்ளது. களத்தில் உள்ள 889 வேட்பாளர்களில் இத்தொகுதியின் 20 வேட்பாளர்கள் அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...

லிவிங் டூ கெதர் வாழ்க்கை... நடிகை இறந்த ஒரே வாரத்தில் சின்னத்திரை நடிகரும் தற்கொலை!

சிறுவன் உயிரிழந்த விவகாரம்... குற்றாலம் அருவிகளை வனத்துறையிடம் ஒப்படைக்க முடிவு!

அதிர்ச்சி... 4 மாதங்களில் 430 கொலைகள்... கதி கலங்க வைக்கும் புள்ளி விவரம்!

இசையமைப்பாளர் ரஹ்மான் மகளின் புது அவதாரம்... நெகிழ்ச்சி பதிவு!

அம்பேத்கர் இயற்றிய அரசியலமைப்பை எந்த அரசாலும் மாற்ற முடியாது... அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in