ஐரோப்பாவில் குரங்கு அம்மை பாதிப்பு 80 சதவீதம் அதிகரிப்பு: உலக சுகாதார அமைப்பு கவலை

ஐரோப்பாவில் குரங்கு அம்மை பாதிப்பு 80 சதவீதம் அதிகரிப்பு: உலக சுகாதார அமைப்பு கவலை

குரங்கு அம்மை 80 சதவீத்திற்கும் அதிகமான பாதிப்பு ஐரோப்பில் பதிவாகியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.

கரோனா தொற்று பரவலுக்கு மத்தியில் குரங்கு அம்மையும் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்த நோய் ஐரோப்பா, ஆப்பிரிக்காவில் அதிகளவில் பரவி உள்ளது. தற்போது கடந்த திங்கட்கிழமையுடன் முடிந்த வாரத்தில் 59 நாடுகளில் 6,027 பேருக்கு குரங்கு அம்மை உறுதி செய்யப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.
கடந்த 27-ம் தேதியுடன் ஒப்பிடுகையில் குரங்கு அம்மை பாதிப்பு 77 சதவீதம் அதிகரித்து இருக்கிறது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. குரங்கு அம்மையால் இதுவரை 3 பேர் இறந்துள்ளனர்.
இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கூறுகையில், "குரங்கு அம்மை வைரஸ் அதிகரித்து வருவதும், பரவலும் கவலை அளிக்கிறது. 80 சதவீதத்துக்கும் அதிகமான பாதிப்பு ஐரோப்பாவில் பதிவாகி உள்ளது" என தெரிவித்தார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in