`இரட்டைக்கொலைக்கு மூளையாக செயல்பட்டார்'- பஞ்சாயத்து தலைவர் கொலையில் கைதானவர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்

`இரட்டைக்கொலைக்கு மூளையாக செயல்பட்டார்'- பஞ்சாயத்து தலைவர் கொலையில் கைதானவர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்

மாடம்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவர் படுகொலை வழக்கில் சகோதரர்கள் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பழிக்கு பழியாக இந்த கொலை நடந்திருப்பதாக காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம், கூடுவாஞ்சேரி அருகேயுள்ள மாடம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (48). புரட்சி பாரத கட்சிப் பிரமுகரான இவர், மாடம்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவராக இருந்து வந்தார். இந்த நிலையில் ஆதனூர், ராகவேந்திரா நகரில் நேற்று முன்தினம் இரவு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது வெங்கடேசன் மீது நாட்டு வெடிகுண்டுகள் வீசப்பட்டன. இதில் நிலை தடுமாறிய அவரை, 9 பேர் கொண்ட மர்மக் கும்பல் ஒன்று சுற்றி வளைத்து வெட்டிச் சாய்த்தது. இதில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே வெங்கடேசன் உயிரிழந்தார்.

மாடம்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவர் வெங்கடேசன்
மாடம்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவர் வெங்கடேசன்

இது குறித்து மணிமங்கலம் காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. விரைந்து வந்த காவல்துறையின், வெங்கடேசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வந்தனர். கொலையாளிகள் 9 பேரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் சகோதரர்கள் உள்பட 8 பேரை கைது செய்துள்ளனர். அவர்களிடம் நடத்தப்பட்ட முதல் கட்ட விசாரணையில், அண்மையில் மணிமங்கலத்தில் நடந்த இரட்டைக் கொலையில் வெங்கடேசன் மூளையாக செய்யப்பட்டதாகவும் இதற்கு பழி வாங்குவதற்காக அவரை கொலை செய்ததாகவும் தெரியவந்துள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in