ரயில்வேயில் வேலையென எஸ்.ஐயிடம் 8 லட்சம் மோசடி: புகாருக்குள்ளானவரின் அதிர்ச்சி ஹிஸ்ட்ரி

சசிகுமார்( மாலை அணிந்தவர்)
சசிகுமார்( மாலை அணிந்தவர்)

ரயில்வேயில் வேலை வாங்கி தருவதாக எஸ்.ஐயிடம் 8 லட்சம் மோசடி செய்தவர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

சிதம்பரம் மாவட்டம் அண்ணாமலை நகரில் உள்ள காவலர் குடியிருப்பில் வசிப்பவர் மங்கை. இவரது கணவர் பாஸ்கர். இவர் சிதம்பரம், அண்ணாமலை நகர் காவல் நிலையத்தில் எஸ்.ஐயாக உள்ளார். இவரது மகன் விக்னேஷ்(22). இவர் பி.இ மெக்கானிக்கல் பட்டப்படிப்பு முடித்து விட்டு வேலை தேடிக் கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் பாஸ்கருக்கு தனது நண்பர் மூலம் சென்னையைச் சேர்ந்த சசிகுமார், ஜெயகுமார் ஆகியோரது நட்பு கிடைத்தது. அப்போது பாஸ்கரிடம், உங்கள் மகன் விக்னேஷிக்கு ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாகவும், அதற்குப் பணம் செலவாகும் என பாஸ்கர் தெரிவித்தார்.

.இதனை நம்பி பாஸ்கர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் சென்னை மைலாப்பூரில் உள்ள ஓட்டலில் சசிகுமார், ஜெயக்குமார் ஆகியோரிடம் மகன் வேலைக்காக 8 லட்ச ரூபாய் பணத்தை கொடுத்துள்ளார்... பல மாதங்களாகியும் சசிகுமார் கூறியது போல் வேலை வாங்கி தரவில்லை. இதனால் சந்தேகமடைந்த எஸ்ஐ பாஸ்கர், அவர்களிடம் பணத்தைத் திருப்பி தருமாறு கேட்டுள்ளார்.

சசிகுமார்.(கோட்டு அணிந்திருப்பவர்).
சசிகுமார்.(கோட்டு அணிந்திருப்பவர்).

ஆனால் அவர்கள் பணத்தைத் திருப்பி தராமல் ஏமாற்றி வந்தனர். இதனால் பாஸ்கர் மனைவி மங்கை, சென்னை அபிராமபுரம் காவல் நிலையத்தில்புகார் அளித்தார். இதன் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே மோசடியில் ஈடுபட்ட சசிகுமாரை கடந்த 7-ம் தேதி எஸ்ஆர்எம்சி போலீஸார் மற்றொரு மோசடி வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தனர். புழல் சிறையில் அடைக்கப்பட்ட சசிகுமார் ஏற்கெனவே ஐஏஎஸ் அதிகாரி எனக்கூறி பலரிடம் வேலை வாங்கி தருவதாக பல கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in