‘சுரணையற்ற அரசால் தினமும் 8 விவசாயிகள் தற்கொலை’

மகாராஷ்டிராவில் பகீர் குற்றச்சாட்டு
விவசாயி -சித்தரிப்புக்கானது
விவசாயி -சித்தரிப்புக்கானது

’மகாராஷ்டிரா மாநிலத்தில் தினமும் 8 விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள்’ என்று சட்டப்பேரவையில் அதன் எதிர்கட்சித் தலைவரான அஜித் பவார் குற்றம்சாட்டியுள்ளார்.

நாட்டின் பொருளாதார தலைநகராக மும்பையை பெற்றிருக்கும் மகாராஷ்டிரா மாநிலம், அதன் மறுபக்கத்தில் அதிகளவில் தற்கொலையாகும் விவசாயிகளின் கோரத்தையும் கொண்டுள்ளது. பருத்தி விவசாயிகள் மத்தியில் ஆண்டுதோறும் தற்கொலை செய்துகொள்ளும் விவசாயிகளின் எண்ணிக்கை கூடி வருகிறது. மாநில சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவரும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவருமான அஜித் பவார் இந்த விவகாரத்தை அவையில் இன்று எழுப்பி உள்ளார்.

”ஏக்நாத் ஷிண்டே - தேவேந்திர பட்நாவிஸ் தலைமையிலான நிர்வாகம் விவசாயிகளின் துயரத்தை பொருட்படுத்தாதும், அவர்களின் கோரிக்கையை காதுகொடுக்காதும் சுரணையற்ற அரசாக விளங்கி வருகிறது. அதிகரிக்கும் கடன் தொல்லை, காப்பீடு முறைகேடுகள், விளைபொருளுக்கு உரிய விலை கிடைக்காதது, உரம் மற்றும் பூச்சிக்கொல்லியின் திடீர் விலை உயர்வு, கடன் வழங்காது புறக்கணிக்கும் வங்கிகள் என விவசாயிகளுக்கு எல்லா திசையிலும் பிரச்சினைகள் அதிகரித்து வருகின்றன. அவை எதனையும் கண்டுகொள்ளாத மாநில அரசின் பொறுப்பற்ற நிர்வாகத்தால், மகாராஷ்டிர விவசாயிகளில் தினமும் 8 பேர் தற்கொலை செய்து கொள்கின்றனர்” என்று அஜித்பவார் குற்றம்சாட்டி உள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in