
காவல் நிலையம் அருகே பழ வியாபாரி வீட்டில் இருந்து 8 பயங்கர வெடிகுண்டுகள் மீட்கப்பட்ட சம்பவம் பிஹாரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிஹார் மாநில;ம ஹாஜிபூர் காவல் நிலையத்தில் இருந்து 200 மீட்டர் தொலைவில் உள்ள சவுத்ரி முபாக் மொஹல்லாவில் உள்ள பழ வியாபாரி முகமது மசூம் என்பவரது வீட்டில் நேற்று இரவு போலீஸார் திடீரென சோதனை மேற்கொண்டனர். அப்போது அவரது வீட்டில் உள்ள மீன் தொட்டியில் 8 பயங்கர வெடிகுண்டுகள் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுகுறித்து அவரிடம் போலீஸார் விசாரித்த போது, அந்த பகுதியில் உள்ள மசூதிக்கு அருகில் பை கிடந்தது என்றும், அதன் உள்ளே என்ன இருந்தது என்று தெரியாது என்றும் முகமது மசூம் தெரிவித்துள்ளார். அவரை கைது செய்து போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து காவல் துறை அதிகாரி ஓம் பிரகாஷ் கூறுகையில், "பழ வியாபாரி வீட்டில் மீன் தொட்டியில் வைக்கப்பட்டிருந்த 8 வெடிகுண்டுகள் கைப்பற்றட்டுள்ளன. கடந்த 2018-ம் ஆண்டு மொகரம் ஊர்வலத்தின் போது மஸ்ஜித் சவுக்கில் கலவரத்தைத் தூண்டியதாக பழ வியாபாரி மீது ஏற்கெனவே குற்றச்சாட்டு உள்ளது. மேலும் அப்போது நடைபெற்ற கலவரத்தின் போது துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். அந்த வழக்கில் இவர் ஜாமீனில் வெளிவந்துள்ளார்" என்றும் கூறினார். பழ வியாபாரி வீட்டில் பயங்கர வெடிகுண்டுகள் கைப்பற்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.