துப்பாக்கி காட்டி மிரட்டுதல், பணம்-பரிசு அளித்தல்... தேர்தல் விதிமீறலில் இதுவரை 79,000 புகார்கள்

தேர்தல் ஆணையம் அதிர்ச்சித் தகவல்
சி-விஜில் செயலி
சி-விஜில் செயலி

‘சி-விஜில்’ என்ற பிரத்யேக செயலி மூலம், 79,000-க்கும் மேற்பட்ட தேர்தல் நடத்தை விதிமீறல் தொடர்பான புகார்கள் பெறப்பட்டுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் இன்று(மார்ச் 29) தெரிவித்துள்ளது.

மக்களவைத் தேர்தல் அட்டவணை அறிவிக்கப்பட்டதில் இருந்து தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக, தேர்தல் ஆணையத்தின் சி-விஜில் செயலி மூலம் 79,000-க்கும் மேற்பட்ட புகார்கள் பெறப்பட்டதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்திய  தேர்தல் ஆணையம்
இந்திய தேர்தல் ஆணையம்

தேர்தல் நடத்தை விதிமீறல் தொடர்பான புகார்களை தெரிவிக்க சி-விஜில்(cVIGIL) என்பது பிரத்யேக மொபைல் செயலியை பொதுமக்கள் பயன்படுத்தலாம். வீடியோ அல்லது புகைப்படத்தை அனுப்பினால், அந்த ஆதாரத்தின் அடிப்படையில், அடுத்த 100 நிமிடங்களில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் தருணத்தில் சி-விஜில் ஒரு பயனுள்ள கருவியாக மாறியுள்ளது. மேலும் தேர்தல் பணி மேற்பார்வைக்கும், பிரச்சாரம் சார்ந்த ஒழுங்கீனத்தை குறைப்பதிலும் பெரும் உதவியாக உள்ளது. மாவட்ட கட்டுப்பாட்டு அறைகள், தேர்தல் அதிகாரிகள் மற்றும் பறக்கும் படை குழுக்களுடன், புகாரளிக்க முன்வரும் பொதுமக்களை சி-விஜில் எளிதில் இணைக்கிறது.

புகார்களை அளித்த பிறகு, புகார்தாரர்கள் ஒரு தனித்துவமான ‘ஐடி’யைப் பெறுவார்கள். இதன் மூலம் அவர்கள் தங்கள் மொபைல் மூலமாகவே, பதிவு செய்த புகார் தீர்க்கப்பட்டுள்ளதா என்பதை எளிதாக கண்காணிக்க முடியும். இந்த சி-விஜில் வாயிலாக இதுவரை 79 ஆயிரத்துக்கும் அதிகமான புகார்கள் பெறப்பட்டுள்ளதாகவும், அவற்றில் சுமார் 99 சதவீத புகார்கள் தீர்க்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும் அப்படி தீர்க்கப்பட்ட புகார்களிலும் 89 சதவீதத்துக்கு அதிகமானவை, புகார் பதிவான 100 நிமிடங்களுக்குள் தீர்வு காணப்பட்டிருப்பதாக ஆணையம் தெரிவித்துள்ளது.

சி-விஜில் புகார்கள்
சி-விஜில் புகார்கள்

பதிவான புகார்களில் சுமார் 58,500 புகார்கள், அதாவது 73 சதவீதம் சட்டவிரோத விளம்பரங்கள் தொடர்பானவையாக இருந்தன. 1400 புகார்கள் பணம், பரிசுப் பொருட்கள் மற்றும் மதுபானம் விநியோகம் தொடர்பானதாகவும், 2454 புகார்கள் சொத்துக்கள் சேதம் தொடர்பாகவும் இருந்தது. துப்பாக்கியை காட்டி மிரட்டியது தொடர்பாக பதிவான 535 புகார்களில், 529-க்கு தீர்வு காணப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதையும் வாசிக்கலாமே...    

காங்கிரஸ் கட்சிக்கு அடுத்த அதிர்ச்சி... ரூ.1,700 கோடி அபராதம் செலுத்த வருமான வரித்துறை நோட்டீஸ்!

அதிர்ச்சி... மாமியாரை தரதரவென இழுத்துச் சென்று குப்பைக் கிடங்கில் போட்ட மருமகள்!

பகீர்... ஒரே இடத்தில் 60 பசுக்கள் கொலை...10,000 கிலோ இறைச்சி பறிமுதல்!

கோயிலுக்கும், மசூதிக்கும் ஒரே பெயர் பலகை; கெத்து காட்டும் குடியிருப்புவாசிகள்!

திட்டமிட்டு கொல்லப்பட்டாரா முக்தார் அன்சாரி; மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவு

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in