அரசு வேலை வாங்கித் தருவதாக 7.70 லட்சம் மோசடி: போலி நியமன ஆணை வழங்கிய வாலிபர் கைது

சதீஷ்
சதீஷ்

சென்னை மாநகராட்சி மற்றும் அங்கன்வாடியில் வேலை வாங்கி தருவதாக கூறி போலி பணிநியமன ஆணை வழங்கி 7.70 லட்ச ரூபாய் மோசடி செய்த வாலிபர் கைது. செய்யப்பட்டுள்ளார்.

விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூரைச் சேர்ந்தவர் சிவா. இவர் வேளச்சேரி விஜயநகரைச் சேர்ந்த சதீஷ் (35) என்பவரிடம் தனக்கும், தனது மனைவிக்கும் அரசு வேலை வாங்கித்தருமாறு கேட்டுள்ளார். சென்னை மாநகராட்சி அல்லது அங்கன்வாடியில் வேலை வாங்கி தருவதாக கூறி அவரிடம் இருந்து ரூ. 7.70 லட்சத்தை சதீஷ் பெற்றுள்ளார். இதன் பின் சில வாரங்கள் கழித்து சிவாவின் மனைவிக்கு சென்னை மாநகராட்சியில் வேலை வழங்கியது போன்று ஒரு பணிநியமன ஆணை கடிதத்தை கொடுத்துள்ளார்.

அதை சிவா எடுத்து சென்று சென்னை மாநகராட்சி அதிகாரியிடம் காட்டிய போது அது போலியான ஆணை எனத் தெரியவந்தது. இதனை அடுத்து சதீஷிடம் பணத்தைத் திருப்பிக் கேட்டதற்கு பணம் திருப்பிக் கொடுக்காமல் சிவாவை மிரட்டியுள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட சிவா இது குறித்து வேளச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதன் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து சதீஷை நேற்று கைது செய்தனர். பின்னர் அவர் மீது ஏமாற்றுதல், பொய்யான ஆவணங்களைப் புனைதல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in