நேபாளத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: 72 பேர் பலி!

நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம்
நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம்

நேபாளத்தின் வடமேற்கு பகுதியில் ஏற்பட்ட பயங்கரமான நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 72ஆக அதிகரித்துள்ளது.

இடிந்து கிடக்கும் வீடு
இடிந்து கிடக்கும் வீடு

கடந்த சில நாட்களாக இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில், நேபாளத்தின் வடமேற்குப்பகுதியில் நேற்று இரவு 11.32 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அது ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவானது. இதன் காரணமாக வீடுகள் சீட்டுக் கட்டுப்போல சரிந்து விழுந்துள்ளன. இதில் நூற்றுக்கணக்கான மக்கள் சிக்கிக் கொண்டனர்.

இந்த நிலநடுக்கம், இந்தியாவிலும் பல இடங்களில் உணரப்பட்டது. இதேபோன்று சீன எல்லைகளிலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த 30 நாட்களில் மூன்றாவது முறையாக நேபாளத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து மலைப்பிரதேசங்களில் இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை காலை 7 மணி நிலவரப்படி 72ஆக அதிகரித்துள்ளது. மேலும் நூற்றுக்கும் அதிகமானோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. அத்துடன் மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in