ஓடும் பேருந்தில் 70 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல்: கேரளத்தில் சிக்கிய மதுரை வாலிபர்

கோப்புப்படம்
கோப்புப்படம்

நாகர்கோவில்- திருவனந்தபுரம் வழித்தடத்தில் தனியார் சொகுசுப் பேருந்தில் பயணிகளோடு, பயணிகளாக 70 லட்சம் ரூபாய் ஹவாலா பணம் கொண்டு சென்ற மதுரை வாலிபரை கேரள போலீஸார் கைது செய்தனர்.

கேரளத்தில் வரும் 8-ம் தேதி ஓணப்பண்டிகை வருகிறது. மலையாளிகளின் மிக முக்கிய பண்டிகையான ஓணத்தினை கொண்டாட பல்வேறு நாடுகளிலும் இருக்கும் மலையாளிகள் சொந்த ஊருக்கு வந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் இதை மையமாக வைத்து ஹவாலா பணப் பரிவர்த்தனையும் அதிகளவில் நடப்பதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து அனைத்து இடங்களிலும் சோதனையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில், தமிழகத்தில் இருந்து கேரளம் நோக்கி இயக்கப்படும் தனியார் பேருந்து வழியாக ஹவாலா பணம் கொண்டு செல்வதாக கேரள போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து அமரவிளை பகுதியில் உள்ள சோதனை சாவடியில் பேருந்தில் ஏறி காவலர்கள் சோதனை செய்தனர். அப்போது பேருந்தில் ஒரு பையில் இருந்த 70 லட்ச ரூபாய் ஹவாலா பணம் பறிமுதல் செய்யப்பட்டது. பணத்துடன் பேருந்தில் வந்த மதுரையைச் சேர்ந்த பைசல் அமீர்(39) என்பவரை போலீஸார் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in