கோவையில் வாகனச் சோதனையில் சிக்கிய 70 கிலோ கஞ்சா சாக்லேட்: பிஹார் இளைஞர்கள் இருவர் கைது

கோவையில் கஞ்சா சாக்லேட்டுடன் கைது செய்யப்பட்ட பிஹார் இளைஞர்கள்
கோவையில் கஞ்சா சாக்லேட்டுடன் கைது செய்யப்பட்ட பிஹார் இளைஞர்கள்கோவையில் வாகனச் சோதனையில் சிக்கிய 70 கிலோ கஞ்சா சாக்லேட்: பிஹார் இளைஞர்கள் இருவர் கைது

கோவை மாவட்டம் துடியலூர் பகுதியில் வாகனச்சோதனையில் 7 லட்சம் மதிப்புள்ள 70 கிலோ கஞ்சா சாக்லேட்டுகள் இன்று பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக பிஹாரைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.

கோவையில் போதை தரக்கூடிய கஞ்சா சாக்லேட்டுகளை விற்பனைக்காக கடத்திச் செல்வதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து கோவை சரவணம்பட்டி - துடியலூர் மெயின் ரோட்டில் போலீஸார் வாகனச்சோதனையில் இன்று ஈடுபட்டிருந்தனர்.

அப்போது கஞ்சா சாக்லேட்டுகளை நான்கு சக்கர வாகனத்தில் விற்பனைக்காக கொண்டு சென்ற பிஹார் மாநிலத்தைச் சேர்ந்த சந்தன்குமார், அங்கித்குமார் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.7 லட்சம்மதிப்புள்ள 70 கிலோ கஞ்சா சாக்லேட்டுகள் மற்றும் நான்கு சக்கர வாகனம் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர். குற்றவாளிகளைப் பிடித்த தனிப்படையினரை கோவை மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் வெகுவாகப் பாராட்டினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in