60 அடி ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 7 வயது சிறுவன்: 24 மணி நேரத்திற்குப் பிறகு பிணமாக மீட்பு

மீட்பு  பணி
மீட்பு பணி60 அடி ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 7 வயது சிறுவன்: 24 மணி நேரத்திற்குப் பிறகு பிணமாக மீட்பு

மத்தியப்பிரதேச மாநிலத்தில் 60 அடி ஆழமுள்ள ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 7 வயது சிறுவன் 24 மணி நேரத்திற்குப் பிறகு பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் விதிஷா மாவட்டத்தில் உள்ள கெர்கேடி பத்தர் கிராமத்தைச் சேர்ந்த லோகேஷ் அஹிர்வார்(7) என்ற சிறுவன், நேற்று தெருவில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த ஆழ்துளை கிணற்றில் தவறிவிழுந்தார். இதையறிந்த அவனது குடும்பத்தினர் உடனடியாக தீயணைப்புத்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த தேசிய பேரிடர் மீட்புப் படை (என்டிஆர்எஃப்) மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படை (எஸ்டிஆர்எஃப்) வீரர்கள் மீட்பு நடவடிக்கையில் இறங்கினர். 60 அடி ஆழமுள்ள ஆழ்துளைக் கிணற்றில் 43-வது அடியில் சிறுவன் லோகோஷ் சிக்கியிருந்தது தெரிய வந்தது. இதையடுத்து சிறுவனை மீட்பதற்கான தொடர் நடவடிக்கையில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டனர்.

சுவாசிக்க காற்றில் இல்லாமல் தவித்த சிறுவனுக்காக ஆழ்துளை கிணற்றுக்குள் ஆக்ஸிஜன் குழாய் மூலம் செயற்கை சுவாசம் வழங்கப்பட்டது. இந்த நிலையில், ஜேசிபி இயந்திரம் மூலம் குழி தோண்டி 24 மணி நேரத்திற்குப் பிறகு மீட்கப்பட்ட சி றுவன் 14 கி.மீ தொலைவில் உள்ள லேட்ரி நகரத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால், ஏற்கெனவே சிறுவன் லோகோஷ் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனால் அக்கிராம மக்கள் சோகத்தில் ஆழ்ந்தனர்.

ஆழ்துளை கிணற்றில் விழுந்து உயிரிழந்த சிறுவன் லோகேஷ் குடும்பத்திற்கு 4 லட்ச ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் என்று மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் அறிவித்துள்ளார். உயிரிழந்த லோகோஷ் குடும்பத்திற்கு விதிஷா மாவட்ட ஆட்சியர் உமா சங்கர் பார்கவா ஆறுதல் தெரிவித்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in