நச்சுவாயு தாக்கி 7 தொழிலாளர்கள் சாவு: எண்ணெய் டேங்கரை சுத்தம் செய்த போது பயங்கரம்

தொழிற்சாலையில் மூச்சுததிணறி 7 தொழிலாளர்கள் சாவு
தொழிற்சாலையில் மூச்சுததிணறி 7 தொழிலாளர்கள் சாவுநச்சுவாயு தாக்கி 7 தொழிலாளர்கள் சாவு: எண்ணெய் டேங்கரை சுத்தம் செய்த போது பயங்கரம்

ஆந்திராவில் எண்ணெய் தொழிற்சாலையில் டேங்கரை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருநத 7 தொழிலாளர்கள் நச்சுவாயு தாக்கி மூச்சுத்திணறி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திரா மாநிலம் காக்கிநாடாவில் ராகம்பேட்டா கிராமத்தில் அம்பதி சுப்பண்ணா எண்ணெய் தொழிற்சாலை உள்ளது. சமையல் எண்ணெய் உற்பத்தி செய்யும் இந்த நிறுவனத்தில் உள்ள டேங்கர்களைச் சுத்தம் செய்யும் பணி இன்று நடைபெற்றது. 24 அடி ஆழமுள்ள எண்ணெய் டேங்குக்குள் சுத்தம் செய்ய இறங்கிய போது நச்சுவாயு தாக்கி ஒவ்வொரு தொழிலாளியாக மயங்கி உள்ளே விழுந்துள்ளனர். இப்படி விழுந்த 7 தொழிலாளர்கள் மூச்சுத்திணறி உயிரிழந்தனர்.

இறந்த 7 பேரில் ஐந்து பேர் அல்லூரி சீதாராமராஜு மாவட்டத்தில் உள்ள படேரு கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், இருவர் அதே மாவட்டத்தில் உள்ள புலிமேரு கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிய வந்தது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், தீயணைப்பு துறையினர் டேங்குக்குள் இருந்த 7 பேரின் உடல்களை மீட்டனர். நச்சுவாயு தாக்கி மூச்சுத்திணறி இறந்தவர்கள் பெயர்கள் விவரம் போலீஸாரால் வெளியிடப்பட்டது. உயிரிழந்தவர்கள் கிருஷ்ணா, நரசிம்மம், சாகர், கொரத்தாடு பாஞ்சிபாபு, கர்ரி ராமராவ், பிரசாத் மற்றும் கட்டமுரி ஜெகதீஷ் என அடையாளம் காணப்பட்டனர்.

தொழிற்சாலை நிர்வாகம் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்காததால் இந்த விபத்து ஏற்பட்டதாக இறந்தவர்களின் குடும்பத்தினர் குற்றம் சாட்டினர்.

சம்பவ இடத்திற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எம்.ரவீந்திரநாத் பாபு, ஆட்சியர் கிருத்திகா சுக்லா ஆகியோர் விரைந்து வந்து வந்து விசாரணை நடத்தினர். எண்ணெய் தொழிற்சாலை நிர்வாகம் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என எம்.ரவீந்திரநாத் பாபு தெரிவித்தார். இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க அரசுக்கு பரிந்துரை செய்வதாக ஆட்சியர் கிருத்திகா சுக்லா உறுதியளித்தார். அந்த தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினரும், முன்னாள் உள்துறை அமைச்சருமான சின்னராஜப்பா, விபத்து நடந்த எண்ணெய் தொழிற்சாலையைப் பார்வையிட்டார். டேங்கரைச் சுத்தம் செய்ய அனுபவமில்லாத பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டதாக அப்போது அவர் குற்றம் சாட்டினார்.

ஒரே நேரத்தில் 7 தொழிலாளர்கள் மூச்சுத்திணறி உயிரிழந்த சம்பவம் ஆந்திராவில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in