இந்த மாதத்திற்குள் 7 ஆயிரம் பேர் பணிநீக்கம்: மெட்டா அதிரடி முடிவு

மெட்டாவில் ஆட்குறைப்பு
மெட்டாவில் ஆட்குறைப்புஇந்த மாதத்திற்குள் 7 ஆயிரம் பேர் பணிநீக்கம்: மெட்டா அதிரடி முடிவு

மார்ச் மாதத்திற்குள் 7 ஆயிரம் ஊழியர்களை ஃபேஸ்புக் நிறுவனம் பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது.

பிரபல சமூக வலைதளமான ஃபேஸ்புக் , தனது நிறுவனத்தின் பெயரை மெட்டா என மாற்றியது. இதுதான் வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களுக்கு தாய் நிறுவனம். இதன் தலைவராக மார்க் ஜூக்கர்பெர்க் உள்ளார்.

உலகம் முழுவதும் கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு ஏற்பட்ட பொருளாதார பேரழிவில் பல நிறுவனங்கள் இன்னும் மீண்டு எழமுடியாமல் உள்ளன. இதனால் தங்களது பணியாளர்களை பணிநீக்கம் செய்து வருகின்றன. இதன்படி கூகுள், அமேசான்,ட்டிவிட்டர் உள்பட பல நிறுவனங்கள் தங்களது ஊழியர்களில் பல ஆயிரம்பேரை பணிநீக்கம் செய்துள்ளன.

இந்த நிலையில், உலகின் மிகப்பெரிய சமூகவலைதள நிறுவனமான மெட்டா, 2022 நவம்பரில் முதல்கட்டமாக 13 ஆயிரம் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்தது. மேலும் இரண்டாவது சுற்றில் 7 ஆயிரம் பேர் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என்ற தகவலும் பரவியது.

அதன்படி 2023 மார்ச் மாதத்திற்குள் தொழில்நுட்ப நிறுவனத்தின் மேலாளர்கள், அதன் தற்போதைய ஊழியர்களில் 7 ஆயிரம் பேர் பணிநீக்கம் செய்யப்படலாம் என்று சுட்டிக்காட்டப்பட்டது. விளம்பர வருவாயில் மந்தநிலையைக் கண்ட மெட்டா, மெட்டாவர்ஸ் எனப்படும் மெய்நிகர் ரியாலிட்டி தளத்திற்கு கவனம் செலுத்தியுள்ளது. வருவாய் இழப்பை ஈடுசெய்யவும், பொருளாதார மந்தநிலையைக் கருத்தில் கொண்டும் பணிநீக்க நடவடிக்கையில் அதிரடியாக இறங்கியுள்ளதாக மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது. அதற்கான நடவடிக்கையை தற்போது தொடங்கி உள்ளது. அதன்படி மார்ச் மாதத்திற்குள் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை பணிநீக்கம் செய்ய மெட்டா முடிவெடுத்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in