பொதுக்கூட்ட நெரிசலில் சிக்கி தொண்டர்கள் 8 பேர் உயிரிழப்பு: சந்திரபாபு நாயுடு கண்முன்னே நடந்த சோகம்

பொதுக்கூட்ட நெரிசலில் சிக்கி தொண்டர்கள் 8 பேர் உயிரிழப்பு: சந்திரபாபு நாயுடு கண்முன்னே நடந்த சோகம்

ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு நடத்திய பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி தொண்டர்கள் 8 பேர் உயிரிழந்தனர். 5 பேர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அரசியல் கூட்டத்தில் 8 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மக்களின் நம்பிக்கை முதல்வராக இருந்து வந்தவர் தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு. 2004-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி 47 தொகுதிகளில் மட்டும் வெற்றி பெற்று ஆட்சியை இழந்தது. ஆட்சி அதிகாரத்தில் இருந்து இறக்கப்பட்ட தெலுங்கு தேசம் கட்சியை தற்போது ஆட்சி கட்டிலில் அமர வைக்க சந்திரபாபு நாயுடு தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்.

இந்த நிலையில் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினருக்கும், தெலுங்கு தேசம் கட்சியினருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு, வன்முறையாக வெடித்து வருகிறது. இதையடுத்து, ஆளுங்கட்சிக்கு எதிராக சந்திரபாபு நாயுடு பிரச்சார பொதுக்கூட்டத்தை தொடங்கி இருக்கிறார். `இது என்ன கருமம் நம்ம மாநிலத்திற்கு' எந்த தலைப்பில் இந்த பிரச்சாரக் கூட்டத்தை தொடங்கி உள்ள சந்திரபாபு நாயுடு, ஆந்திரா மாநிலம் நெல்லூர் மாவட்டம், கந்துக்கூரில் நேற்று இரவு தெலுங்கு தேசம் கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

கட்டுக்கடங்காத கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 8 பேர் உயிரிழந்தனர். 5 பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களின் 8 பேர் குடும்பத்திற்கு தலா 10 லட்சம் நிதியுதவி அறிவித்திருக்கிறார் சந்திரபாபு நாயுடு. மேலும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.

சந்திரபாபு நாயுடு நடத்திய அரசியல் கூட்டத்தில் தொண்டர்கள் 8 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in