யாழ்ப்பாணம் சிறையில் இருந்து தமிழக மீனவர்கள் 7 பேர் விடுதலை


யாழ்ப்பாணம் சிறையில் இருந்து தமிழக மீனவர்கள் 7 பேர் விடுதலை

இலங்கை கடற்படையால் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 7 பேரை நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த மீனவர்கள், ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 500-க்கும் மேற்பட்ட படகுகளுடன் கடந்த 27-ம் தேதி மீன்பிடிக்க சென்றனர்.

அப்போது நெடுந்தீவு அருகே அவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படை, எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி ஒரு விசைப்படகையும் அதிலிருந்து 7 மீனவர்களை கைது செய்து ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதனர். அவர்களை இன்று வரை யாழ்ப்பாணம் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவு பிறப்பித்திருந்தார்.

இந்த வழக்கு விசாரணை இலங்கை ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது, கைது செய்யப்பட்ட 7 தமிழக மீனவர்களையும் விடுதலை செய்து ஊர்காவல்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மீண்டும் குறிப்பிட்ட காலத்திற்குள் எல்லை தாண்டி மீன்பிடித்த வழக்கில் இவர்கள் சிக்கினால், அவர்களுக்கு கடுங்காவல் தண்டனை விதிக்கப்படும் என இலங்கை நீதிமன்றம் எச்சரித்து விடுதலை செய்துள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in