3 மாதங்களில் விவேகானந்தர் நினைவு இல்லத்தை 7 லட்சம் பேர் பார்வை!

விவேகானந்தர் நினைவு மண்டபம்
விவேகானந்தர் நினைவு மண்டபம்

கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் நினைவு இல்லத்தை கடந்த மூன்று மாதங்களில் 7 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்வையிட்டுள்ளனர். இதனால் கன்னியாகுமரி சுற்றுலாதலத்தின் வருவாயும் பெருகி உள்ளது.

கன்னியாகுமரியில் கடல் நடுவே விவேகானந்தர் நினைவு மண்டபம் உள்ளது. இதேபோல் சர்வதேச சுற்றுலாதளமாகவும் கன்னியாகுமரி இருப்பதனால் இங்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகளும் வருவது வழக்கம். அதிலும் நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதங்களில் சபரிமலை சீசன் களைகட்டும். சபரிமலைக்கு ஆன்மிக ரீதியாக வரும் யாத்ரீகர்கள் விவேகானந்தர் பாறைக்கும் செல்வது வழக்கம்.

இவர்களின் வசதிக்காக குகன், விவேகானந்தர் உள்ளிட்ட படகுகளும் தமிழக அரசின் பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் இயக்கப்படுகிறது. இதுமட்டும் இல்லாமல், குமரியில் கடந்த மூன்று மாதங்களில் விவேகானந்தர் நினைவு இல்லத்திற்கு 7 லட்சத்து 17 ஆயிரத்து 591 பேர் பார்வையிட்டுள்ளனர். சபரிமலை சீசனை முன்னிட்டு, விவேகானந்தர் நினைவு மண்டபத்தை கடந்த நவம்பர் மாதத்தில் 2 லட்சத்து 9 ஆயிரத்து 891 பேரும், டிசம்பரில் 2 லட்சத்து 53 ஆயிரம் பேரும், ஜனவரி மாதத்தில் 2 லட்சத்து 54 ஆயிரத்து 700 பேரும் பார்வையிட்டுள்ளனர். இதை விவேகானந்தர் நினைவு இல்லம் அறிவித்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in