பேருந்து கவிழ்ந்து 7 பேர் உயிரிழப்பு

பேருந்து கவிழ்ந்து 7 பேர்  உயிரிழப்பு

ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்ததில் 7 பேர் உயிரிழந்தனர். 40-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள தர்மாபுரத்தில் இருந்து திருப்பதி அருகேயுள்ள நகரிக்குத் தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. நகரிக்கு அருகில் உள்ள கிராமம் ஒன்றில் இன்று நடைபெற உள்ள திருமண நிச்சயதார்த்த விழாவிற்காக சுமார் 50-க்கும் மேற்பட்டோர் பேருந்தில் சென்றுகொண்டிருந்தனர்.

பக்கராபேட்டை எனும் இடத்தின் அருகே மலைப்பாதையில் பேருந்து சென்றுகொண்டிருந்தபோது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது. அதனால் சாலையின் ஓரத்தில் உள்ள பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்தது. இதில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட 40-க்கும் மேற்பட்டோர் திருப்பதி ரூயா மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த விபத்து அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.