திடீரென தீப்பிடித்த 7 எலெக்ட்ரிக் பைக்குகள்: ஷோரூமில் சார்ஜ் செய்தபோது விபரீதம்!

திடீரென தீப்பிடித்த 7 எலெக்ட்ரிக் பைக்குகள்: ஷோரூமில் சார்ஜ் செய்தபோது விபரீதம்!

மகாராஷ்டிராவின் புனே நகரில் உள்ள மின்சார இருசக்கர வாகன விற்பனை ஷோரூமில் வைக்கப்பட்டிருந்த ஏழு எலெக்ட்ரிக் பைக்குகள் சார்ஜ் செய்யும் போது ஏற்பட்ட தீ விபத்தில் எரிந்ததாக தீயணைப்புப் படை அதிகாரிகள் தெரிவித்தனர்.

புனேவில் உள்ள கங்காதம் பகுதிக்கு அருகில் அமைந்துள்ள எலெக்ட்ரிக் பைக் ஷோரூமில் திங்கள்கிழமை மாலை நடந்த இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் தீயணைப்புத்துறை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக மஹாராஷ்ட்ரா தீயணைப்புத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பைக்குகள் சார்ஜ் செய்வதற்காக இணைக்கப்பட்டிருந்தன. முதல்கட்ட விசாரணையில் அதிக சார்ஜ் ஏற்றியதால் ஷார்ட் சர்க்யூட் ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது. ஆனால், தீ விபத்துக்கான காரணம் குறித்து விரிவான விசாரணைக்கு பிறகே தெரியவரும். இச்சம்வத்தில் ஏழு பைக்குகள் தீப்பற்றி எரிந்தன’ என கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, இந்த ஆண்டு மார்ச் மாதம் புனேவில் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தீப்பிடித்தது. இதன்பின்னர் பின்னர் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் 1,441 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை ஆய்வுக்காக திரும்பப் பெற்றது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in