
கிழக்கு தஜிகிஸ்தானில் இன்று 6.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சுமார் 20.5 கி.மீ ஆழத்தில் உள்ளூர் நேரப்படி (0037 GMT) அதிகாலை 5:37 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
தஜிகிஸ்தானில் வியாழக்கிழமை அதிகாலையில் 6.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் சீனாவின் மேற்கு ஜின்ஜியாங் மாகாணத்திற்கு அருகில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது. இது தஜிகிஸ்தானின் முர்கோப் நகருக்கு மேற்கே 67 கிமீ தொலைவிலும், 20.5 கிமீ ஆழத்திலும் இருந்ததாக யுஎஸ்ஜிஎஸ் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் "சிறிய அல்லது மக்கள் தொகை இல்லாத இடங்களில்" நிலச்சரிவுகள் ஏற்படலாம் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தின் எபிசென்டர் எனப்படும் மையப்பகுதி ஆப்கானிஸ்தான் மற்றும் சீனாவின் எல்லையில் உள்ள கிழக்குப் பகுதியான கோர்னோ-படக்ஷானில் தோன்றியது. நிலநடுக்கம் ஏற்பட்ட குறைந்த மக்கள்தொகை கொண்ட இந்த பிரதேசம் உயரமான பாமிர் மலைகளால் சூழப்பட்டுள்ளது. முதலில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் சுமார் 20 நிமிடங்களுக்குப் பிறகு 5.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் மீண்டும் ஏற்பட்டது.