வேலைக்காக காத்திருக்கும் 67.23 லட்சம் பேர்: தமிழக அரசு வெளியிட்ட தகவல்

வேலைக்காக காத்திருக்கும் 67.23 லட்சம் பேர்: தமிழக அரசு வெளியிட்ட தகவல்

தமிழகத்தில் அரசு வேலை வாய்ப்புக்காக 67.23 லட்சம் பேர் பதிவு செய்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் ஆண்டுதோறும் படித்து முடித்து லட்சக்கணக்கான இளைஞர்கள் வேலை தேடி அலைகின்றனர். பலர் அரசு வேலையை நம்பி இருக்கின்றனர். பலர் படித்தவுடன் கிடைத்த வேலையை பார்த்துக் கொண்டு பின்னர் அரசு வேலையை எதிர்நோக்கி இருக்கும் நிலை ஏற்படுகிறது. இந்த நிலையில் தமிழக வேலை வாய்ப்பு அலுவலகம் புள்ளிவிவரம் ஒன்று வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் வேலை வாய்ப்புக்காக இதுவரை 67.23 லட்சம் பேர் பதிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.

அக்டோபர் வரையிலான வேலை வாய்ப்பு பதிவுக்கான தகவல்களை வெளியிட்டுள்ள வேலை வாய்ப்பு அலுவலகம், அரசு வேலைக்காக 67.23 லட்சம் பேர் பதிவு செய்திருப்பதாகவும் அதில் ஆண்கள் 31.40 லட்சம் பேரும், பெண்கள் 35.82 லட்சம் பேரும். மூன்றாம் பாலினத்தவர் 268 பேரும் பதிவு செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் 18 வயதுக்கு உட்பட்ட பள்ளி மாணவர்கள் 18.42 லட்சம் பேரும், காத்திருப்போரில் 19 முதல் 30 வயது உள்ளவர்கள் 28.9 லட்சம் பேரும், 31 வயது முதல் 45 வயது உடையவர்கள் 18.30 லட்சம் பேரும், 46 வயது முதல் 60 வயது உடையவர்கள் 2.30 லட்சம் பேரும், காத்திருப்போரில் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 562 பேரும், காத்திருப்போரில் மாற்றுத்திறனாளிகள் 1.42 லட்சம் பேரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in