ஏகலைவா மாதிரி குடியிருப்புப் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத 6,329 காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்.
பழங்குடியினர் நல அமைச்சகத்தின் கீழ் உள்ள தன்னாட்சி அமைப்பான பழங்குடி மாணவர்களுக்கான தேசியக் கல்வி சங்கம் (National Education Society for Tribal Students) இந்த ஆள்சேர்க்கையை நடத்துகிறது. டி.ஜி.டி (பட்டதாரி ஆசிரியர்) மற்றும் விடுதி காப்பாளர் (Hostel Warden) பதவிக்கான 6329 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இதற்கான விண்ணப்ப நடைமுறை 19.07.2023-ல் தொடங்கியது. விண்ணப்பங்கள் சமர்பிக்க கடைசி நாள் 18.08.2023 ஆகும்.
பட்டதாரி ஆசிரியர் பதவிக்கு, தொடர்புடைய துறைகளில் இளம்நிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் மற்றும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இளங்கலை கல்வியியல் (Bachelor of Education) படிப்பு முடித்திருக்க வேண்டும். விடுதி காப்பாளர் பதவிக்கு கட்டாயம் இளங்கலை கல்வியியல் (Bachelor of Education) படிப்பு முடித்திருக்க வேண்டும்.
சி.பி.எஸ்.இ.யுடன் இணைந்து நெஸ்ட்ஸ் இ.எஸ்.இ -2023-ஐ "ஓ.எம்.ஆர் அடிப்படையிலான (பேனா காகிதம்)" முறையில் நடத்தப்படும். இணையதள விண்ணப்பங்களின் விரிவான நடைமுறை, தகுதி அளவுகோல்கள் மற்றும் ஒவ்வொரு பதவிக்கும் பாடத்திட்டத்துடன் பிற விவரங்கள் emrs.tribal.gov.in. என்ற வலைதளத்தில் கிடைக்கின்றன.