கேரளாவில் ஓணம் பண்டிகைக்கு 625 கோடிக்கு மது விற்பனை: காரணம் இது தானா?

கேரளாவில் ஓணம் பண்டிகைக்கு 625 கோடிக்கு  மது விற்பனை: காரணம் இது தானா?

ஓணம் பண்டிகை வாரத்தில் மட்டும் கேரளா மாநிலம் முழுவதும் ரூ.625 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை நடைபெற்றுள்ளது.

கேரளாவில் மது விற்பனையில் புதிய சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. மதுபானங்கள் கார்ப்பரேஷனான பெவ்கோ மற்றும் நுகர்வோர் பெட் நிறுவனத்தின் விற்பனை நிலையங்கள் மூலம் மட்டும் ரூ.117 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. பெவ்கோ நிறுவனம் பூராடம் நாளான செப்.6-ம் தேதி ரூ.104 கோடிக்கு மது விற்பனை செய்துள்ளது. பெவ்கோ வரலாற்றில் ஒரு நாள் மது விற்பனை 100 கோடியைத் தாண்டியது இதுவே முதல்முறையாகும். கடந்த ஆண்டு பூராடம் நாளில் ரூ.78 கோடிக்கும், திருவோணத்திற்கு முதல் நாளான உத்ராடம் நாளில் ரூ.85 கோடிக்கு தான் மது விற்பனை நடந்துள்ளது.

ஆனால், ​​இம்முறை மது விற்பனை பல மடங்கு அதிகரித்துள்ளது. ஓணம் பண்டிகை வாரத்தில் மட்டும் கேரள மாநிலம் முழுவதும் ரூ.625 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையானது. பெவ்கோவின் விற்பனையில் 85 சதவீதம் மாநில அரசால் விற்பனை செய்யப்படுகிறது. உத்ராடம் நாளில் மாநிலத்திலுள்ள ஐந்து கடைகளில் மது விற்பனை ஒரு கோடி ரூபாயைத் தாண்டியுள்ளது. கொல்லம் ஆசிரமத்திலுள்ள பெவ்கோ கடையில் அதிகளவாக ரூ.1.6 கோடிக்கு மதுபானம் விற்பனை செய்யப்பட்டது.

மேலும் இரிங்கலக்குடா, சேர்ந்தால கோர்ட் சந்திப்பு, பையனூர், திருவனந்தபுரம் பவர்ஹவுஸ் ரோடு ஆகிய இடங்களில் உள்ள விற்பனை நிலையங்களிலும் அதிகளவில் மது விற்பனை நடந்துள்ளது.பெவ்கோவில் புதிதாக நியமிக்கப்பட்ட எம்.டி யோகேஷ் குப்தாவின் தலையீடு, முன்பு இருந்த மது பற்றாக்குறையை முழுமையாகத் தீர்த்துள்ளது. ஓணத்தின் போது மலிவான, பிரபலமான மதுபான பிராண்ட்டுகளை எளிதில் கிடைக்கச் செய்தது தான் இந்த விற்பனை அதிகரிப்பிற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in