‘உங்களுக்கு ஒன்றரை கோடி ரூபாய் கார் பரிசாக விழுந்துள்ளது’ - தூத்துக்குடி பெண்ணிடம் ரூ.61 லட்சம் நூதன மோசடி

ஆன்லைன் மோசடி
ஆன்லைன் மோசடி1.5 கோடி மதிப்புள்ள கார் பரிசு விழுந்துள்ளதாக தூத்துக்குடி பெண்ணிடம் 61 லட்சம் மோசடி

தூத்துக்குடி பெண்ணுக்கு கேரள லாட்டரியில் பணம் மற்றும் கார் பரிசு விழுந்து இருப்பதாக கேரள வாலிபர் 61 லட்சம் ரூபாய் மோசடி செய்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்து உள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், காமநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் லூர்துராஜ். இவரது மனைவி ஜான்சி(52) இவர்களின் மகளின் செல்போன் எண்ணுக்கு வாட்ஸ் அப்பில் தெரியாத எண்ணில் இருந்து ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதில் கேரள லாட்டரியில் இந்த எண்ணுக்கு 25 லட்சம் ரூபாய் பரிசு விழுந்து இருப்பதாக வந்தது. இதை நம்பிய ஜான்சி, அந்த எண்ணைத் தொடர்பு கொண்டபோது, அவரது ஆதார் உள்ளிட்ட விபரங்களைப் பெற்ற மர்மநபர், பரிசுத்தொகைக்கு வரி செலுத்த வேண்டும். அதன் பின்பே பணம் விடுவிக்கப்படும் என 11 லட்சம் வாங்கி உள்ளார்.

தொடர்ந்து அதே நபர், மறுநாளே உங்களுக்கு ஒன்றரை கோடி மதிப்பிலான காரும் பரிசு விழுந்துள்ளது. அதற்கு 50 லட்சம் மட்டும் செலுத்தவேண்டும். என மொத்தமாக 61 லட்சம் வங்கிக் கணக்கு மூலம் பணம் பெற்றார். ஆனால் பணமோ, பரிசோ திருப்பித் தரவில்லை. இதுகுறித்து பாதிப்பட்ட பெண் ஜான்சி, தூத்துக்குடி எஸ்.பி பாலாஜி சரவணனுக்குப் புகார் கொடுத்தார். அவர் தனிப்படை அமைத்தார். அவர்கள் செய்த விசாரணையில், ‘கேரள மாநிலம், எர்ணாக்குளம் மாவட்டத்தைச் சேர்ந்த சாண்ட்லிஸ் ஜான்(26) என்பவரே இந்த மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது. அவரைக் கைது செய்த தூத்துக்குடி போலீஸார், அவரை பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர். மேலும் பலரையும் சாண்ட்லிஸ் ஜான் ஏமாற்றியுள்ளது தெரியவர, இவ்விவகாரத்தை தூத்துக்குடி சைபர் க்ரைம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in