எப்படி கோயில் சிலையைத் தொடலாம்?; பட்டியலின சிறுவன் குடும்பத்திற்கு 60 ஆயிரம் அபராதம்: பதற வைக்கும் பஞ்சாயத்து தீர்ப்பு

எப்படி கோயில் சிலையைத் தொடலாம்?; பட்டியலின சிறுவன் குடும்பத்திற்கு 60 ஆயிரம் அபராதம்: பதற வைக்கும் பஞ்சாயத்து தீர்ப்பு

கோயிலுக்குள் நுழைந்து சிலையைத் தொட்டதாகக் கூறி கர்நாடகாவில் பட்டியலினச் சிறுவனின் குடும்பத்திற்கு 60 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் சிறுபான்மையினருக்கு எதிராகவும், பட்டியலின சமூகத்திற்கு எதிராகவும் அதிகமான அளவில் வன்முறைகள் அரங்கேறி வருவதாக குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. இதை மெய்ப்பிப்பது போல கர்நாடகாவில் ஒரு சம்பவம் தற்போது நடைபெற்றுள்ளது.

கர்நாடகா மாநிலம், கோப்பல் மாவட்டத்தில் மாலூர் தாலுகாவில் ஹுல்லேரஹள்ளி கிராமம் உள்ளது. இங்கு பட்டியலினத்தைச் சேர்ந்த ரமேஷ், ஷோபா தம்பதி வசிக்கின்றனர். இந்த கிராமத்தில் உள்ள கோயிலுக்குள் ரமேஷின் மகனான சிறுவன் நுழைந்து சாமி சிலையைத் தொட்டதாக அவருடைய குடும்பத்திற்கு 60 ஆயிரம் ரூபாயை கிராம பஞ்சாயத்து அபராதம் விதித்துள்ளது. மேலும், அபராதத் தொகையை செலுத்தும் வரை ஊருக்குள் வரக்கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளனது. இதனால் சிறுவனின் தாய், காவல் நிலையத்தில் புகார் கூறியுள்ளார். இந்த நிலையில் ரமேஷ் குடும்பத்திற்கு பல்வேறு தரப்பில் இருந்து போனில் கொலை மிரட்டல்கள் வந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in