கிறிஸ்துமஸ் பண்டிகை: சென்னையில் இருந்து 600 சிறப்பு பேருந்துகளை இயக்க முடிவு

கிறிஸ்துமஸ் பண்டிகை: சென்னையில் இருந்து 600 சிறப்பு பேருந்துகளை இயக்க முடிவு

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து பிற ஊர்களுக்குச் செல்ல 600 சிறப்புப் பேருந்துகள் இயக்க அரசுப் போக்குவரத்துக் கழகம் முடிவு செய்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் டிச.25-ம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை கிறிஸ்தவ மக்களால் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகை ஞாயிற்றுக்கிழமையில் வருவதாலும், அடுத்து புத்தாண்டு உள்ளிட்ட தொடர் விடுமுறைகள் இருப்பதாலும் சென்னையில் இருந்து பலரும் சொந்த ஊர்களுக்குச் செல்ல தயாராகி வருகின்றனர். இதனால் பெரும்பாலான அரசு, தனியார் பேருந்துகளில் முன்பதிவுகள் நிரம்பியுள்ளன.

இந்த நிலையில், கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்குச் செல்ல 600 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அரசுப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. தேவையைப் பொருத்து பிற வழித்தடங்களில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in