தமிழகத்தில் சுங்கச்சாவடி கட்டணம் 60% குறைகிறது: திமுக எம்பியின் கோரிக்கையை ஏற்றார் மத்திய அமைச்சர்

தமிழகத்தில் சுங்கச்சாவடி கட்டணம் 60% குறைகிறது: திமுக எம்பியின் கோரிக்கையை ஏற்றார் மத்திய அமைச்சர்

தமிழகத்தில் சுங்கச்சாவடி கட்டணம் 60 சதவீதம் குறைக்கப்படுவதாக மத்திய சாலை போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்துள்ளார். திமுக எம்பியின் கோரிக்கையை ஏற்று இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கச்சாவடி அமைக்கப்பட்டு வருவதால் வாகன ஓட்டிகள் கடும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர். குறிப்பாக தமிழ்நாட்டில் வாகன ஓட்டிகள் கடுமையாக துயரங்களை சந்திக்கின்றனர். பல இடங்களில் மோதல் ஏற்படுகிறது. சென்னையில் இருந்து ஒருவர் திருநெல்வேலிக்கு செல்லும்போது 20க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளை கடந்து செல்ல வேண்டி உள்ளது. ஒவ்வொரு சுங்கச்சாவடிக்கும் கட்டணம் வசூலிக்கப்படுவதால் அவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழக்கும் சூழ்நிலை ஏற்படுகிறது.

தற்போது செங்கல்பட்டில் இருந்து திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் வரை 400 அடி சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலையில் 500 மீட்டர் இடைவெளியில் சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. நடுவில் குறுக்கு சாலைகளும் அமைக்கப்பட்டு இருப்பதால் அருகில் ஊருக்குச் செல்லும் பொதுமக்கள் இந்த சுங்கச்சாவடியை கடந்துதான் சொல்கின்றனர். இதனால் அவர்கள் சுங்கச்சாவடிக்கு கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்படுகிறது. இந்த சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும் என்று தமிழக அரசு பல்வேறு கோரிக்கைகளை வைத்து வருகிறது. ஆனாலும் மத்திய அரசு இது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்து வந்தது.

இந்த நிலையில் தமிழகத்தில் சுங்கச்சாவடிகளை மூட வேண்டும் என்றும் பல இடங்களில் உள்ள சுங்கச்சாவடிகளில் கட்டணங்களை குறைக்க வேண்டும் என்றும் மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரிக்கு திமுக மாநிலங்களவை உறுப்பினர் வில்சன் கோரிக்கை வைத்திருந்தார் இந்த கோரிக்கையை ஏற்றுக் கொண்ட மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகள் உள்ள சுங்கச்சாவடி கட்டணத்தை 40 சதவீதம் வரை குறைக்க உத்தரவிட்டுள்ளார். மேலும் தமிழ்நாட்டில் 9 சுங்கச்சாவடிகளில் 60 சதவீதம் வரை கட்டணத்தை குறைக்கவும் முடிவு செய்திருப்பதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்துள்ளார். மத்திய அமைச்சரின் இந்த அறிவிப்பு தமிழகத்தில் உள்ள வாகன ஓட்டுகளுக்கு சற்று ஆறுதலை ஏற்படுத்தி இருக்கிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in