வீட்டில் சட்ட விரோதமாக பட்டாசு தயாரிப்பு; 60 கிலோ வெடி பொருட்கள் பறிமுதல்: 2 பேர் சிக்கினர்

பட்டாசு
பட்டாசுவீட்டில் சட்ட விரோதமாக பட்டாசு தயாரிப்பு; 60 கிலோ வெடி பொருட்கள் பறிமுதல்: 2 பேர் சிக்கினர்

வீட்டில் சட்ட விரோதமாக பட்டாசு தயாரித்த இருவரை போலீஸார் கைது செய்து 60 கிலோ வெடி பொருட்களை பறிமுதல் செய்தனர்.

விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை போலீஸார் தாயில்பட்டி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள ஒரு வீட்டில் வெடி தயாரிக்கப்படுதாக தகவல் கிடைத்தது. இதன்படி சக்திவேல் நகரில் சின்னப்பராஜ் என்பவர் வீட்டில் அனுமதியின்றி பட்டாசுகள் தயாரிப்பது தெரிந்தது.

அங்கிருந்த 10 கிலோ சோர்சா வெடி, முழுமையாக தயார் ஆகாத 10 கிலோ சரவெடி, முழுமையாக தயாரான 20 கிலோ சர வெடி உள்ளிட்ட பட்டாசு ரகங்களை பறிமுதல் செய்து, சின்னப்பராஜை கைது செய்தனர்.

இதே போல், விஜயகரிசல்குளம் பகுதியில் ரோந்து சென்ற போலீஸார் சங்கையா என்பவர் வீட்டில் அனுமதியின்றி தயாரான 20 கிலோ சோர்சா வெடி, 2 கிலோ சோர்சா பின்னல் வெடி உள்ளிட்ட பட்டாசு ரகங்களை பறிமுதல் செய்தனர். இதையடுத்து சங்கையாவை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in