விவசாயி வீட்டில் திருடியவருக்கு 6 ஆண்டு சிறைத் தண்டனை!

திருட்டு வழக்கில் சிறை தண்டனை பெற்ற பொன்ராஜ்
திருட்டு வழக்கில் சிறை தண்டனை பெற்ற பொன்ராஜ்விவசாயி வீட்டில் திருடியவருக்கு 6 ஆண்டு சிறைத் தண்டனை!

திண்டுக்கல் அருகே விவசாயி வீட்டின் பீரோவை உடைத்து திருடியவருக்கு 6 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம், தாண்டிகுடி கீழ் மலை பகுதி விவசாயி ஒருவரின் வீட்டில்பணம், நகை உள்ளிட்ட பொருட்கள் கடந்த 2018-ம் ஆண்டில் திருடு போனது. இது தொடர்பான புகாரின் பேரில் தாண்டிகுடி போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர்.

தேனி மாவட்டத்தை சேர்ந்த பொன்ராஜ் (42) என்பவர் திருடியது தெரிந்தது. இதனையடுத்து பொன்ராஜை தாண்டிகுடி போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு கொடைக்கானல் குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இறுதி விசாரணைக்கு பின், குற்றவாளியான பொன்ராஜிக்கு 6 ஆண்டு சிறைத் தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in