மாயமான 6 வயது சிறுமி நீச்சல் குளத்தில் மயங்கிக் கிடந்தார்: வானூர் ரிசார்ட்டில் நடந்தது என்ன?

மாயமான 6  வயது சிறுமி நீச்சல் குளத்தில்  மயங்கிக் கிடந்தார்: வானூர் ரிசார்ட்டில் நடந்தது என்ன?

புத்தாண்டை முன்னிட்டு குடும்பத்துடன் விடுதியில் அறை எடுத்துத் தங்கிய மென்பொறியாளரின் மகள் அங்குள்ள நீச்சல் குளத்தில் தவறி விழுந்து உயிர் இழந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது

சென்னை ரெட் ஹில்ஸ் பகுதியைச் சேர்ந்தவர் பரந்தாமன். மென்பொறியாளரான இவர் புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக தன் மனைவி மற்றும் 6 வயது மகள் சஹானா ஆகியோரோடு சுற்றுலா வந்தார். அப்போது வானூர் அருகே உள்ள பூத்துறை பகுதியில் உள்ள தனியார் ரிசார்ட் ஒன்றில் தங்கினார். அங்கு நீச்சல் குளமும் உள்ளது. இங்கு அவர் தன் குடும்பத்துடன் குளித்துவிட்டு அறைக்கு வந்தார். அதன் பின்பு சிறிதுநேரம் கழித்து அவரது மகள் சஹானா திடீரென மாயமானார்.

இதனைத் தொடர்ந்து ரிசார்டில் அவரைப் பரந்தாமன் தேடினார். அப்போது சிறுமி சஹானா நீச்சல் குளத்தில் மூச்சுத்திணறிய நிலையில் கிடந்தார். உடனே பரந்தாமன் தன் மகளைப் புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதித்தார். அங்கு சிகிச்சை பலனின்றி சிறுமி சஹானா பரிதாபமாக உயிர் இழந்தார். இதுகுறித்து ஆரோவில் போலீஸார் வழக்குப்பதிந்து, சஹானா உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in