சென்னை- கோவை இடையே 6 ரயில்கள் திடீர் ரத்து: காரணம் இதுதான்!

சென்னை- கோவை இடையே 6 ரயில்கள் திடீர் ரத்து: காரணம் இதுதான்!

பராமரிப்பு பணி காரணமாக சென்னை- கோவை இடையே 6 ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "பராமரிப்பு பணிகள் காரணமாக கீழ்கண்ட ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு: சென்னை எழும்பூர்-சேலம் (வண்டி எண்:22153) இடையே இரவு 11.55 மணிக்கு இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில் நாளை (புதன்கிழமை) 1, 2-ம் தேதிகளில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

சேலம்-எழும்பூர் (22154) இடையே இரவு 9.30 மணிக்கு இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில் வருகிற 1, 2, 3-ம் தேதிகளில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. சென்னை எம்.ஜி.ஆர். சென்ட்ரல்-கோவை (12679) இடையே மதியம் 2.30 மணிக்கும், கோவை-எம்.ஜி.ஆர். சென்ட்ரல் (12680) இடையே காலை 6.15 மணிக்கும் இயக்கப்படும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில்கள் டிசம்பர் 3-ம் தேதி முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

எம்.ஜி.ஆர். சென்ட்ரல்- கோவை (12675) இடையே காலை 6.10 மணிக்கும், கோவை-எம்.ஜி.ஆர். சென்ட்ரல் (12676) இடையே மதியம் 3.15 மணிக்கும் இயக்கப்படும் கோவை எக்ஸ்பிரஸ் ரயில்கள் டிசம்பர் 3-ம் தேதி முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. எம்.ஜி.ஆர். சென்ட்ரல்-கோவை (12243) இடையே காலை 7.10 மணிக்கும், கோவை-எம்.ஜி.ஆர். சென்ட்ரல் (12244) இடையே மதியம் 3.05 மணிக்கும் இயக்கப்படும் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில்கள் டிசம்பர் 3-ம் தேதி முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது" என்று கூறப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in