கோவை கார் வெடிப்பு சம்பவம்: புழல் சிறைக்கு மாற்றப்படும் 6 கைதிகள்

கோவை கார் வெடிப்பு சம்பவம்: புழல் சிறைக்கு மாற்றப்படும் 6 கைதிகள்

கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள 6 பேரும் புழல் சிறைக்கு மாற்றப்பட உள்ளார்கள்.

கோவையில் கடந்த அக்டோபர் 23-ம் தேதி அதிகாலையில் நடந்த கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தில் ஜமேஷா முபின் என்பவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து ஜமேசா முபின் வீட்டைக் காவல்துறையினர் சோதனையிட்ட போது பொட்டாசியம் நைட்ரேட், சல்பர் போன்ற வெடிமருந்து தயாரிக்கப் பயன்படும் 75 கிலோ மூலப் பொருட்களை காவல்துறையினர் கைப்பற்றினர். இந்த சம்பவம் தொடர்பாக முகமது தல்கா(25), முகமது அசாருதீன்(23), முகமது ரயாஸ்(27), ஃபிரோஸ் இஸ்மாயில்(27), முகமது நவாஸ் இஸ்மாயில்(26), முபீனின் உறவினர் அப்சர்கான் ஆகிய ஆறு பேர் உபா சட்டத்தின் கீழ் கைது செய்து வழக்குப் பதிவு செய்தனர்.

கோவை சம்பவத்தில் தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்படும் நபர்கள் மற்றும் தேசியப் பாதுகாப்பு முகமையின் விசாரணை (என்ஐஏ) வளையத்திற்குள் உள்ள நபர்கள் ஆகியோர்  தொடர்புடைய இடங்களில், தமிழக காவல்துறையினர் முன்கூட்டியே விசாரணை நடத்துவதுடன், அந்த இடங்களில் திடீர் சோதனையும் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் இன்று அவர்களை ஆஜர்படுத்தி, புழல் சிறையில் அடைக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in