மலக்குடல், உள்ளாடையில் இருந்த 3.54 கிலோ தங்கம்; அதிர்ந்துபோன அதிகாரிகள்: கோவை ஏர்போர்ட்டில் 6 பேர் சிக்கினர்

மலக்குடல், உள்ளாடையில் இருந்த 3.54 கிலோ தங்கம்; அதிர்ந்துபோன அதிகாரிகள்: கோவை ஏர்போர்ட்டில் 6 பேர் சிக்கினர்

சார்ஜாவில் இருந்து கோவைக்கு தங்கம் கடத்தி வந்த ஒருவரை கைது செய்த சுங்கத்துறை அதிகாரிகள், 5 பேரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர், தங்கத்தை மலக்குடலில் வைத்து கடத்தி வந்த சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியிருக்கிறது.

சென்னை, திருச்சி, கோவை உள்ளிட்ட விமான நிலையங்களில் தினந்தோறும் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. வெளிநாடுகளில் இருந்து தங்கத்தை கடத்தும் செயலில் கும்பல் ஈடுபட்டு வருகிறது. அதிகாரிகள் தீவிர கண்காணிப்புக்கு மத்தியில் இந்த கடத்தல் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், சார்ஜாவிலிருந்து நேற்று மாலை ஏர் அரேபியா விமானம் ஒன்று கோவை விமான நிலையம் வந்துள்ளது.

இதையடுத்து பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது பயணிகள் 6 பேரிடம் சந்தேகத்தின் அடிப்படையில் அதிகாரிகள் விசாரணை நடத்தியதோடு அவர்களது உடமைகளை சோதனை செய்தனர். அப்போது, அவர்கள் தங்கள் மலக்குடலிலும் உள்ளாடையிலும் தங்கத்தை மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இருவரிடம் இருந்து 3.54 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இவற்றின் மதிப்பு 2.5 கோடி என்று கூறப்படுகிறது. இந்த கடத்தலில் மூளையாக செயல்பட்ட சிவகங்கையை சேர்ந்த முத்துக்குமார் என்பவர் கைது செய்யப்பட்டார். மற்ற 5 பேரிடம் தீவிர விசாரணையை அதிகாரிகள் மேற்கொண்டு வருகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in