6 பேருக்குப் பதவி உயர்வு; இரண்டு பேர் பணியிட மாற்றம்: புதிய டீன்களின் பட்டியல் வெளியீடு!

6 பேருக்குப் பதவி உயர்வு; இரண்டு பேர் பணியிட மாற்றம்: புதிய டீன்களின் பட்டியல் வெளியீடு!

தமிழகத்தில் உள்ள 6 மருத்துவக் கல்லூரிகளுக்கு புதிய முதல்வர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி சென்னை மருத்துவக் கல்லூரி இயக்குநராக பணியாற்றி வரும் கே.நாராயணசாமி, செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார். அதுபோல் பேராசிரியர் சீனிவாசன்(கீழ்பாக்கம் மருத்துக் கல்லூரி) , கரூர் மருத்துவக் கல்லூரி முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார். இயக்குநர் திருப்பதி (சென்னை மருத்துவக் கல்லூரி), கடலூர் மருத்துவக் கல்லூரி முதல்வராகவும், கண்காணிப்பாளர் ராஜாஸ்ரீ(ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரி), திண்டுக்கல் மருத்துவக் கல்லூரி முதல்வராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். பேராசிரியர் செந்தில்குமார் (தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி), ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரி முதல்வராகவும், பேராசிரியர் சிவக்குமார் (திருச்சி மருத்துவக் கல்லூரி), தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி முதல்வராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் இரண்டு மருத்துவக் கல்லூரி முதல்வர்கள் வேறு மாவட்டத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி பெரம்பலூர் மருத்துவக் கல்லூரி முதல்வர் மீனாட்சி சுந்தரம், தேனி மருத்துவக் கல்லூரி முதல்வராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதுபோல் தேனி மருத்துவக் கல்லூரி முதல்வர் பாலாஜி, தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி முதல்வராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in