6 மாத சிறைத்தண்டனை அறிவிப்பை மீறி பதுக்கல்: டெல்லியில் 13,700 கிலோ பட்டாசு பறிமுதல்

 6 மாத சிறைத்தண்டனை அறிவிப்பை மீறி பதுக்கல்: டெல்லியில் 13,700 கிலோ பட்டாசு பறிமுதல்

டெல்லியில் தடையை மீறி பதுக்கி வைக்கப்பட்டிருந்த 13,700 கிலோ பட்டாசுகளை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

டெல்லி நகரில் காற்றின் மாசு அளவு அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தீபாவளிக்கு முன்னதாகவோ, தீபாவளியன்றோ பட்டாசு வெடித்தால், 6 மாதம் வரை சிறை தண்டனையும், 200 ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் என டெல்லி அரசு நேற்று முன்தினம் அறிவித்தது.

இதையடுத்து அனைத்து வகையான பட்டாசு உற்பத்தி, சேமிப்பு, விற்பனை மற்றும் பயன்பாடு உடனடியாக தடை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், இந்த முறை டெல்லியில் ஆன்லைனில் பட்டாசு வாங்குவதற்கும், விநியோகிப்பதற்கும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது, மேலும் இந்த தடை ஜனவரி 1-ம் தேதி வரை நீடிக்கும் என்றும் அரசு அறிவத்துள்ளது. இந்த தடையைக் கடுமையாக அமல்படுத்த டெல்லி காவல்துறை, வருவாய்த்துறையுடன் இணைந்து நடவடிக்கை எடுத்து வருவதாக டெல்லி சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால்ராய் தெரிவித்தார்.

அக்.28-ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் சட்டவிரோதமாக பட்டாசுளை பல்வேறு இடங்களில் பதுக்கி வைத்திருப்பதாக டெல்லி போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து டெல்லி போலீஸார் தேடுதல் வேட்டையில் இறங்கி னர். இதில் 19 நாட்களில் நடந்த வேட்டையில் 13,700 கிலோ பட்டாசுகளைப் பறிமுதல் செய்ததுடன், 75 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த நடவடிக்கை தொடரும் என்றும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in