சென்னை ஏர்போர்ட் கழிவறையில் வீசப்பட்ட தங்கம்; அதிகாரிகள் அதிர்ச்சி: சிக்கிய 2 பயணிகள்

சென்னை ஏர்போர்ட் கழிவறையில் வீசப்பட்ட தங்கம்; அதிகாரிகள் அதிர்ச்சி: சிக்கிய 2 பயணிகள்

சென்னை விமான நிலையத்தில், துபாயிலிருந்து சென்னை வந்த இரண்டு பயணிகளிடம் 6 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்களிடம் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சென்னை, மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு துபாயிலிருந்து வரும் பயணிகள் தங்கம் கடத்தி வருவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து சுங்கத் துறை அதிகாரிகள் துபாயிலிருந்து வந்த பயணிகளிடம் கடுமையான சோதனை நடத்தி வந்தார்கள். அப்போது சந்தேகப்படும் படியான ஒருவரைச் சோதனை செய்த போது அவரிடம் 2.750 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

இதைக்கண்ட மற்றொரு நபர் விமான நிலைய கழிவறையில் தான் கொண்டுவந்த 3.250 கிலோ தங்கத்தைக் கழிவறையில் மறைத்து வைத்துவிட்டு வந்துள்ளார். அவரையும் மடக்கி சோதனைக்கு உட்படுத்திய நிலையில், கழிவறையில் மறைத்து வைக்கப்பட்ட 3.250 கிலோ தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றினர். மேலும் துபாயிலிருந்து சென்னைக்குத் தங்கத்தைக் கடத்தி வந்த இரண்டு பயணிகளிடமும் சுங்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in